6 ஆண்டுகளில் வளர்ச்சி.. பொருளாதார முன்னேற்றத்தில் தீவிரம் காட்டும் உ.பி! சாதனைகளை பட்டியலிட்ட யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்ததாகவும், தற்போது வருவாய் உபரி மாநிலம் எனும் அளவுக்கு வளர்ந்திருப்பதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். டெல்லியில் தற்போது 42வது இந்திய-சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசம் சார்பாக சில அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்கள் விற்பனைக்கும், கண்காட்சிக்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தின் தனித்த அடையாளத்தை பலப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் யோகி ஆதித்யநாத் இந்த திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் அடையாளமாக இருக்கும் கைவினை பொருட்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட அளவு வருவாய் இந்த கைவினை பொருட்களிலிருந்து கிடைத்ததாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்நிலையில் உ.பி அரங்குகளை பார்வையிட்டு பேசிய அவர், "கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அதற்கு முன்னர் இந்த மாநிலத்திலிருந்து ஏராளமான மக்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக மற்ற மாநிலங்களுக்கு சென்றனர். தற்போது வேலை வாய்ப்புகள் இங்கு புதியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வறுமை எனும் நிலையிலிருந்து வளர்ந்த நிலைக்க இந்த மாநிலம் முன்னேறியிருக்கிறது. இதற்கு பாஜக அரசுதான் காரணம்.
மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் பெண்களுக்கான பாதுகாப்பு, கல்வி, சமூக மேம்பாடு என பாஜக அரசாங்கம் இரட்டை தளத்தில் செயல்பட்டு அதில் வெற்றி கண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications