விவசாயிகளுக்கான நலத்திட்டம்.. விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாரம்! களமிறங்கிய யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஆண்டுக்கு ரூ.6000 கிடைக்க வழி வகை செய்யும், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விடுபட்டுள்ள விவசாயிகள் இணைய வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

Yogi Adityanath to start Yatra to connect farmers in Pradhan Mantri Kisan Samman Nidhi scheme

இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் சேர்ந்து அனைத்து விவசாயிகளும் பலன் பெற விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி கொடுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் குறைந்த அளவிலான விவசாயிகள்தான் இந்த திட்டத்தில் தங்களை இணைந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், மீதம் உள்ளவர்கள் விரைவில் இணைய வேண்டும் எனவும் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரசாரத்தின் பிரதான நோக்கம் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதாக இருந்தாலும், மாநில அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த திட்டத்தை பயன்படுத்த யோகி ஆதத்யநாத் உத்தரவிட்டுள்ளார். நாளை தொடங்கும் இந்த பிரசாரம் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி வரை நடத்தப்படும். அதேபோல மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+