உ.பி.யில் பா.ஜ.க வெற்றி பெறுவது உறுதி.. இதற்கு காரணம் இவர்தான்.. அமித்ஷா சொல்கிறார்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பிலும் பாஜக வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
ஆனால் கொரோனா பாதிப்பை சரியாக கையாளதமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பா.ஜ.க.வுக்கு அதிருப்தி அலை வீசுவதால் இந்த முறை பாஜக வெல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா
இதனால் பாஜக மேலிடம் இப்போது இருந்தே உத்தரபிரதேச தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அடுத்த தேர்தலில் உத்தரபிரதேச முதல்வர் வேட்ப்பாளராக யோகி ஆதித்யநாத் இருப்பாரா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் அவர்தான் என்று அதனையும் உறுதி செய்தது பாஜக. இந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் கூறிய 90 சதவீத வாக்குறுதிகளை யோகி அரசு நிறைவேற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்..

ஏழை எளிய மக்களுக்காக...
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:- யோகி ஆதித்யநாத் தனது வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். உத்தரபிரதேச அரசின் முயற்சிகளை பாராட்டுகிறேன். எதிர்க்கட்சிகளைப் போலல்லாமல், மாநிலத்தில் உள்ள தற்போதைய அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்காக திறமையாக செயல்படுவதை நிரூபித்துள்ளது.

மக்கள் நம்புவார்கள்
2017 தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை யோகி ஜி மற்றும் அவரது குழுவினர் நிறைவேற்றியுள்ளனர் என்று இன்று நான் பெருமையுடன் கூற முடியும். வரவிருக்கும் மாதங்களில் 100 சதவீத இலக்கை நோக்கி அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்று யோகி ஜியிடம் நான் கூற விரும்புகிறேன். இதன் மூலம் பாஜக எதைச் சொன்னாலும் அதை நிறைவேற்றும் என்று மக்கள் நம்புவார்கள்.

குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தனர்
கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் அமர்ந்திருந்த மக்கள் தங்கள் ஆட்சி அமையும் என நினைத்து வெளியே வருகின்றனர். அகிலேஷ் யாதவ் எத்தனை நாட்கள் வெளிநாட்டில் இருந்தார் என்பதை உ.பி. மக்களிடம் கூற விரும்புகிறேன். கொரோனா பாதிப்பின்போது அவர் இருந்த இடம் மக்களுக்கு தெரியும். அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக மட்டுமே உழைத்தனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications