முதியவர் முகத்தில் ஸ்ப்ரே அடித்த யூடியூபர்.. இப்போ கால ஒடச்சிட்டாய்ங்களே! இதெல்லாம் தேவையா கோபி ?
லக்னோ : நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் பிராங்க் என்ற பெயரில் வயதானவர்களுக்கும் சாலையில் செல்வோருக்கும் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது ஸ்ப்ரே அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள, நிலையில் அவருக்கு காலில் மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் சிறிய சிறிய வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் தான் ஒரு பிரபலமான நபராக மாற வேண்டும் என பல இளைஞர்கள் இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதை பார்க்க முடிகிறது.

இதையடுத்து இன்ஸ்டாகிராம், யூட்யூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ் வீடியோவை தயாரித்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சமையல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், கணவன் மனைவி நடனம், இசை என தொடர்ந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது ஒரு புறம் இருக்க ப்ராங்க் வீடியோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும், பெண்கள், மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்தும், அவர்களிடம் பேச்சுக் கொடுத்தும் பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்படுகிறன.
சில பிராங்க் வீடியோக்கள் காமெடிக்காகவும், மக்களிடம் லைக் பெற வேண்டும் என்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டு ஸ்க்ரிப்டட் வீடியோவாக எடுக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதே நேரத்தில் மக்களோடு மக்களாக கலந்து அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து பிராங்க் செய்கிறேன் என்ற பெயரில் சாலையில் போவோர் வருவோரை துன்புறுத்துவது, முட்டையை விட்டு எறிவது, கலர் பொடிகளை தூவுவது, தண்ணீர் பாக்கெட்டுகளை உடைப்பது என சில நேரங்களில் பிராங்க் வீடியோக்கள் எல்லை மீறி வருகின்றன.
அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் வினய் யாதவ் என்பவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வரும் நபர் ஆவார். இவர் சாலையில் செல்லும் பலரிடம் பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவது. வழக்கம் அந்த வகையில் ஜான்சியில் சாலையில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது நுரை ஸ்பிரேயை அடித்த வினய் யாதவ் அதனை ரீல்ஸாக தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சாலையில் சைக்கிளில் அமைதியாக சென்ற முதியவரின் முகத்தில் மீது ஸ்ப்ரே அடித்து துன்புறுத்திய வினய் யாதவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் நீண்ட தேர்தல் வேட்டைக்கு பிறகு வினய் யாதவை போலீசார் கைது செய்தனர். கைது செய்த பின்னர் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் கால் வலியோடு மெதுவாக நடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முதியவரை முகத்தில் ஸ்ப்ரே அடித்து துன்புறுத்திய வினய் யாதவுக்கு இதுதான் சரியான தண்டனை என்கின்றனர் நெட்டிசன்கள். தற்போது முதியவர் முகத்தில் வினய் யாதவ் ஸ்ப்ரே அடித்த வீடியோவும், கால் வலியோடு போலீசாருடன் நொண்டிக் கொண்டே நடக்கும் வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications