Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தம் 600 பேராம்.. 16 வயது சிறுமியை.. 5 வருடத்திற்கும் மேலாக.. பகீர் பின்னணி.. நடுங்கிய மதுரை..!

மதுரையில் 16 வயது சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 16 வயது சிறுமியை 5 வருடங்களாக 600-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக 7 பேர் இதுவரை கைதாகிய நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் பல பகீர் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தருவதாக, தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அதிரடியாக சம்பவ இடத்துக்கு சென்று சோதனையை நடத்தினர். அப்போதுதான் 16 வயது சிறுமி அங்கு சிக்கியிருப்பதையும், ஒரு சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் பெண்களே ஈடுபடுத்தி வந்ததையும் அறிந்தனர்.

காப்பகம்

காப்பகம்

இதையடுத்து, சம்பந்தட்ட 7 பேரை ஆள் கடத்தல் மற்றும் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியையும் மீட்டு, உடனடியாக அவருக்கு மெடிக்கல் செக்கப் செய்யப்பட்டு, இறுதியில், காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைக்கவும் செய்தனர்.

 பாலியல் தொழில்

பாலியல் தொழில்

பின்னர் சிறுமியிடம் மெல்ல விசாரணையை ஆரம்பித்தபோதுதான் பூதாகரமான பல விஷயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.. மதுரை மாவட்டத்திலேயே பாலியல் தொழிலில் முக்கிய புள்ளிகளாக தேடப்பட்டு வந்தவர்கள் 5 பெண் புரோக்கர்கள்... இவர்களைதான் இத்தனை நாட்களாக போலீசார் தேடி வந்தனர்.. இப்போது சிறுமி விவகாரத்தில் கைதாகி உள்ளது அவர்கள்தான் என்பது தெரியவந்தது.

 ஜெயலட்சுமி

ஜெயலட்சுமி

2015-ம் ஆண்டு சிறுமிக்கு 10 வயசாக இருக்கும்போது, ஜெயலட்சுமி என்பவர் அழைத்து வந்து வளர்த்துள்ளார்.. இந்த ஜெயலட்சுமி பாலியல் தொழில் செய்து வருபவராம்.. 13 வயதில் சிறுமி வயதுக்கு வந்தவுடனேயே, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் ஜெயலட்சுமி. பணத்தாசை காட்டியே பிஞ்சுவை இந்த தொழிலில் தள்ளி விட்டுள்ளார்.

 புரோக்கர்கள்

புரோக்கர்கள்

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ஆயிரக்கணக்கானோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளனர்.. அதாவது ஜெயலட்சுமியின் தோழிகளும் புரோக்கர்களுமான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஆகியோர் சிறுமியை சித்ரவதை செய்து, அந்த நரகத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இவர்கள் 5 பேருமே தற்போது கைதாகி உள்ளனர்.. இவர்களை தவிர சரவணபிரபு, ஆட்டோ டிரைவர் சின்னதம்பியும் கைதாகி உள்ளார்.. இவர்கள் 7 பேரும், மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் சிறுமியை பாலியலுக்கு உட்படுத்தி வற்புறுத்தி வந்தவர்கள். அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தவர்கள்.

பலாத்காரம்

பலாத்காரம்

மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில்தான் சிறுமியை பலாத்காரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.. இங்குதான் நேரில் சென்று அதிரடி சோதனையை மகளிர் போலீசார் நடத்தினர்.. மீட்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விசரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. 11 வயதில் இருந்தே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டுள்ளது..

 அதிர்ச்சி

அதிர்ச்சி

வயதுக்கு வருவதற்கு முன்பிருந்தே அந்த 5 பெண் புரோக்கர்களும் சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்துள்ளனர்.. அதேபோல அடிக்கடி கொஞ்சம் பணத்தையும் சிறுமிக்கு காட்டி ஏமாற்றி வந்துள்ளனர்.. சிறுமி வயதுக்கு வந்த பிறகுதான் மாவட்டம் முழுவதும், பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த பிஞ்சுவை நாசம் செய்ததில் டிரைவர்கள், தொழிலாளர்கள் முதல் தொழில் அதிபர் வரை அடக்கமாம்.. இப்படியே 600-க்கும் மேற்பட்டோர்கள் சிறுமியை நாசம் செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வண்ணாரப்பேட்டை

வண்ணாரப்பேட்டை

இப்படித்தான் கடந்த மாதம், சென்னை வண்ணாரப்பேட்டையிலும் ஒரு சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்தது.. அந்த சிறுமியை, அவரது அக்காவே பாலியல் தொழிலில் தள்ளியதுதான் கொடூரம்.. இந்த வண்ணாரப்பேட்டை சம்பவத்திலும் ஏராளமான உயர் அதிகாரிகள், போலீஸார், விஐபிக்கள் சிக்கியதாக கூறப்பட்டது.. அது தொடர்பான விசாரணை தற்போதும் நடந்து வரும் நிலையில், இந்த மதுரை சம்பவம் அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துள்ளது.. அத்துடன் பெண் குழந்தைகள் பாதுகாப்பும் நமக்கு கேள்விக்குறியாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+