சுனாமிக்கு பிறகு சென்னையில் இப்போ தான் முதல் முறை.. ஒர்னாப் புயலால் கொந்தளித்த கடல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒர்னாப் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னை எண்ணூர், திருவான்மியூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கரையை தாண்டி குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. வடசென்னை கடல் பகுதிகளிலும் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுகின்றன. சுனாமிக்கு பிறகு இப்போது தான் இப்படி பார்க்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுனாமி போல அலைகள் எழுந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.

வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. நாளை அதிகாலை தான் கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இன்று இரவே புயலின் முன்பகுதி கரையை தொட்டுவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

sea storm in Ennore

சென்னையில் கொந்தளித்த கடல்

இன்று நள்ளிரவில் புயலின் மையப்பகுதி கரையைத் தொட்டுவிடும் என்றும் நாளை காலையில் புயலின் கடைசிப்பகுதி கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் போது 180 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக புயல் தாமதமாக கரையை கடந்தால் 220 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.

தற்போது ஆந்திராவில் ஒர்னாப் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வட சென்னை பகுதிகளில் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் அவதியடைந்துள்ளனர். இதேபோன்று சென்னை எண்ணூர் மற்றும் திருவான்மியூரிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம்

குறிப்பாக எண்ணூர் பகுதியில் கடல் நீர் சீறிப்பாய்ந்து கற்களை தாண்டி சாலைக்கு வந்தது. சாலையிலும் வேகத்துடன் பாய்ந்த கடல் நீரால் சாலைகளில் வந்த இருசக்கர வாகனங்கள் தூக்கி வாரிப்போடப்பட்டன. அப்பகுதியில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் கடல் நீர் அடித்து தள்ளியது. கற்களை தாண்டி சாலையில் கடல் நீர் வந்ததால் வாகனங்கள் தள்ளாடியபடியே செல்வதை பார்க்க முடிந்தது.

கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டதை அடுத்து அதனை செல்போனில் வீடியோ எடுக்கவும், செல்ஃபி எடுப்பதற்காகவும் ஏராளமானோர் குவிந்தனர். போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு தெரிவித்தாலும் சிலர் அங்கிருந்து செல்லாமல் வீடியோ எடுத்தனர். அங்கு வசித்து வரும் மக்கள் இது பற்றி கூறுகையில், இப்படி கடல் கொந்தளிப்பதை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன். சுனாமிக்கு பிறகு இப்போது தான் கடல் அலை இவ்வளவு தூரம் வந்து இருக்கிறது. இதுவரைக்கு இப்படி தண்ணீர் வந்ததே இல்லை.." என்றனர்.

வீடியோ காட்சிகள் வைரல்

நெடுஞ்சாலையில் கடல் நீர் தடுப்புகளை தாண்டி அடித்து வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன. சாலையில் வந்த பைக்குகள் சிலவும் கடல் நீர் மோதி, கீழே விழுந்தன. கார்கள், ஆட்டோக்கள் நிலை தடுமாறி நின்றன. நெடுஞ்சாலையில் கடல் நீர் புகுந்த காட்சிகளை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுனாமி எதுவும் வந்துவிட்டதா? என அஞ்சும் அளவுக்கு கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது. கடல் சீற்றத்தால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+