Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதெப்படி SIR? இறந்த பிறகும் 29 பேர்! வாக்காளர் பட்டியலில் குளறுபடி! அதிமுக சரவணன் ஆதாரத்துடன் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் காரணமாக சுமார் 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. இதற்கிடையே பெயர் தவறுதலாக நீக்கப்பட்டவர் மீண்டும் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98ல் திட்டமிட்டு மரணமடைந்த 29 பேர் பெயர்களும், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 12 பேர் பெயர்களும், ஒரு இரட்டை பதிவு என 42 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் டாக்டர்.சரவணன் ஆதரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, SIR நடைமுறை சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 4 முதல் மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்றனர்.

முதலில் டிசம்பர் 4 வரை இருந்த அவகாசம் பின்னர் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போது தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடி 43 லட்சம் 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது.

election commission voter list AIADMK

வாக்காளர் பட்டியல்

இதில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதே நேரத்தில், மொத்தம் 97 லட்சம் 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 15 சதவீதத்தை தாண்டுகிறது. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, நீக்கப்பட்டவர்களில் 26 லட்சம் 94 ஆயிரத்து 672 பேர் இறந்தவர்கள். 3 லட்சம் 98 ஆயிரத்து 278 பேருக்கு இரட்டைப் பதிவு இருந்தது.

தேர்தல் ஆணையம்

ஆனால் முகவரியில் இல்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டவர்கள் மட்டும் 66 லட்சம் 44 ஆயிரத்து 881 பேர். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே முகவரியில் இல்லாதவர்களா அல்லது தவறாக நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களும் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 'சார்' நடவடிக்கையின் போது பலரது பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக புகார் அளித்துள்ளது.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98இல் 844 பேர் வரைவு பட்டியலில் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஆளுங்கட்சியின் தூண்டுதலால் வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் திட்டமிட்டு மரணமடைந்த 29 பேர் பெயர்களும், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 12 பேர் பெயர்களும், ஒரு இரட்டை பதிவு என 42 பேர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

டாக்டர் பா.சரவணன்

இந்த பதிவுகளை நீக்கவும், தவறிழைத்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் உரிய ஆவணங்களுடன் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மதுரை மாநகராட்சி மண்டலம் 2இன் உதவி ஆணையாளரிடம் புகார் மனுவினை வழங்கினார். SIR-ஐ எதிர்ப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி இது போன்ற மோசடிகளை செய்து தேர்தலில் வெற்றி பெற திமுக அரசு முயற்சித்து வருகிறது என்றும் புகார் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+