வாத்யாரே ஃபர்ஸ்ட் அட்டம்ட்! 50 வயதில் நீட் நுழைவுத்தேர்வு எழுத வந்த வழக்கறிஞர்.. மதுரையில் ருசிகரம்!
மதுரை: மதுரையில் 50 வயதான வழக்கறிஞர் ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. 2 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத்தேர்வு இன்று மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

நீட் தேர்வை, நாடு முழுவதும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். சென்னையில் 36 மையங்களில் மொத்தம் 24,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
நீட் தேர்வு தமிழக மாணவர்களை ரொம்பவே ஈர்த்துள்ளதாம்.. அண்ணாமலை சொல்வதை பாருங்க!
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நிலையில் மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைக்குப் பின்னரே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரையில் 50 வயதான வழக்கறிஞர் ஒருவர் நீட் தேர்வு எழுத வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மதுரை நாராயணபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்சிவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 50 வயதான வழக்கறிஞர் சந்தானம் என்பவர் நீட் தேர்வை எழுத வந்தார். முதல்முறையாக தேர்வெழுத வருகை புரிந்ததாக கூறிய அவர் இன்று தனது பிறந்த நாள் என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் குறிப்பிடவில்லை என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. இதனால், வயதானவர்களும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications