திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.. மதுரை முருகன் மாநாட்டில் 6 தீர்மானங்கள்
மதுரை: மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று நடக்கும் முருகன் மாநாட்டில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலையை காக்க வேண்டும். தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்து முன்னணி சாா்பில் மதுரையில் முருகன் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கியது பறை இசை, மேளதாளம் முழங்க கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முரகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயக்குமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மதுரை முருகன் மாநாட்டில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு:
முதல் தீர்மானம்: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்
2வது தீர்மானம்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்.
3வது தீர்மானம்: திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்
4வது தீர்மானம்: தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.
5வது தீர்மானம்: தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
6வது தீர்மானம்: சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் என்று மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications