சொந்த வீட்டில் ஆட்டைய போட்ட ‘டாட்’ஸ் லிட்டில் பிரின்சஸ்’! இன்ஸ்டாவில் பேசி கறந்த ‘டுபாக்கூர்’! ஷாக்!
மதுரை : மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதள ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில் கைகள் இல்லாமல் கூட இருந்த விடலாம், ஆனால் கைகளில் செல்போன்கள் இல்லாமல் மாணவர்களையோ இளைஞர்களையோ காண முடியாது என்ற நிலை தான் இருக்கிறது.
ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- மீனாட்சி தம்பதியினர்.

தங்க நகைகள்
இவர்களது 16 வயது மகள் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 22 என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில் இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார்.

நகைகள் மாயம்
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இது குறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டத்தில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக ஒப்புக் கொண்டார்.

போலீசார் விசாரணை
எனவே இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகை மிரட்டி வாங்கியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications