நா கூசும் வார்த்தைகள்.. ஓவர் ஆபாசம்! எல்லை மீறும் ஓடிடி தளங்கள்! நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மதுரை : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு தொடர்பாக ஒன்றிய தொலைதொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வைத்துள்ளது.
இந்திய சினிமா நாளுக்கு நாள் உலக தரத்தை நோக்கி பயணித்து வருகிறது. அதே நேரத்தில் எந்த மொழி திரைப்படங்களாக இருந்தாலும் அவை முழுமையாக சென்சார் போர்டால் தணிக்கை செய்யப்பட்ட பிறகு மக்கள் காண கிடைக்கிறது.

அதே நேரத்தில் தொலைக்காட்சி தொடர்கள், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் அதிக அளவில் ஆபாச கண்டண்டுகளை கொண்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் ஃபால் லாங்குவேஜ் எனப்படும் ஆபாச வார்த்தைகள், மது -புகையிலை பயன்பாடு, ரத்தம், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல சர்ச்சை கண்டெண்டுகள் இருந்தாலும் அவை தணிக்கை செய்யப்படாமல் வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக ஓடிடி தளங்களிலும் சென்சார் சான்றிதழ்கள் பெறப்பட்ட பிறகு சினிமாக்கள், வெப் சீரியஸ் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது
இந்த நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆதிசிவம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இந்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஒழுக்கம், அறம் மற்றும் கலாச்சாரத்தை மீறும் வகையிலான காட்சிகள், வசனங்கள் இருப்பின் அவற்றை திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் தணிக்கை செய்து வெளியிடும். தற்போது பல்லாயிர ஆயிரம் கோடி நபர்கள் தினமும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
OTT தளத்தில் ஒளிபரப்பப்படும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் ஆகியவற்றில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, ஆபாச பேச்சுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றக் காட்சிகள், பிரிவினைவாத காட்சிகள், தேசவிரோத கருத்துக்கள் போன்றவை எவ்விதமான தணிக்கையும் இன்றி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டில் 2.4 பில்லியன் நபர்கள் OTT தளத்தை பயன்படுத்திய நிலையில், 2027 ஆம் ஆண்டில் அது 4.2 பில்லியன் ஆக உயரும் என தரவுகள் குறிப்பிடுகின்றன. OTT தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகளால் இளம் தலைமுறையினர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே OTT தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு, " வழக்கு தொடர்பாக ஒன்றிய தொலைதொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
'கர' ஓடிடியில் பட்டையைக் கிளப்புது! ரிவ்யூவை நம்பி தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் குமுறல்! -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
வெறும் ₹200 கட்டினால் போதும் ரூ.1,500க்கு பலன்கள்! ஜியோ கொட்டி தரும் ஆஃபர்.. ஆனா ஒரு குட்டி கண்டிஷன் -
ஓடிடி தளங்களின் புதிய வியூகம்! இந்தியாவின் 'மைக்ரோ-டிராமா'! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications