Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா மாறுதலுக்கு ரூ.500 தள்ளுபடி கேட்ட விஏஓ.. விவசாயியை அழவிட்ட மதுரை அதிகாரி.. உடனே பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பட்டா மாறுதல் மற்றும் வன உரிமைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் ஒரே நாளில் கைதாகி உள்ளனர். நேற்று முன்தினம் வேறு இரு 2 மாவட்டங்களில், 2 விஏஓக்கள் கைதாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் மேலும் 2 விஏஓக்கள் கைதாகி உள்ளது, பொதுமக்களை அதிர செய்துள்ளது..

அரசு பணிகளை செய்வதற்கு, பொதுமக்களிடம் பணம் கேட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகளின் போக்கு தொடர்வதும், அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதும் அரசு நிர்வாகத்தில் தொடர்கதையாகி கொண்டிருக்கிறது..

Patta change Greedy Madurai VAO

பட்டா மாறுதல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பிரியா.. இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 சென்ட் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கிப் பதிவு செய்துள்ளார்.

விதிகளின்படி 30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்திருக்க வேண்டிய நிலையில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து மதிப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் காசிராஜனை அணுகியபோது, அவர் பட்டா மாறுதலுக்கு 6000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

முத்துப்பிரியா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னபோது, காசிராஜன் மிகவும் கறாராக நடந்து கொண்டாராம்.. போனில் பேசினால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், "நான் கேட்டதைக் கொண்டு வந்திருங்க" என்று முன்னெச்சரிக்கையாகவும், அலர்ட்டாகவும் பேசினாராம்..

விஏஓ கைது

இறுதியில் 500 ரூபாய் குறைத்துக் கொண்டு 5500 ரூபாய் தருமாறு பேரமும் பேசியிருக்கிறார்.. லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துப்பிரியா மதுரை லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி, நேற்று வி.ஏ.ஓ. அலுவலகத்தில் காசிராஜன் 5500 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, ஏ.டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

அதேபோல நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ஒரு விஏஓ கைதாகி உள்ளார்.. கல்வராயன்மலை வட்டம் கிணத்துவளைவு கிராமத்தை சேர்ந்த கோபி என்பவர் வன உரிமைச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்காக இன்னாடு கிராம நிர்வாக அலுவலர் ரவியை அவர் அணுகியபோது, சான்றிதழ் வழங்க ரவி 7000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டாராம்..

துணிச்சல் புகார்கள்

இது குறித்து கோபி கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய நோட்டுகளை கோபி அலுவலகத்தில் வைத்து ரவியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான போலீசார் ரவியை அதிரடியாகக் கைது செய்தனர்.

ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சப் புகாரில் சிக்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அரசு ஊழியர்கள் இப்படி கைதாவது அதிர்ச்சியை தந்தாலும், கடமை தவறாத பொதுமக்களின் துணிச்சலான புகார்களே இத்தகைய ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த உதவி கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் இங்கு சொல்லியாக வேண்டும்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+