நடுங்கிப்போன மதுரை.. ரத்தம் சொட்டச் சொட்ட.. பள்ளி மாணவர்கள் செய்த காரியம்
மதுரை: மதுரை மாவட்டம், தெப்பக்குளம் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட சரமாரியாக தாக்கி மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பலாக சேர்ந்து 2 மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலதைளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
சமீபகாலமாக பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாய் தகராறு ஒருகட்டத்தில் முற்றி கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில், ஏரியாக்களில் யார் தலைமையேற்பது என்பது தொடர்பான தாக்குதல், காதல் விவகாரம் என பல்வேறு காரணங்களால் மாணவர்களிடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசு மற்றும் கல்வி நிர்வாகத்தினர் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் மாணவர்களிடையோன தாக்குதல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், மதுரை மாவட்டம், தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சேர்ந்து 2 மாணவர்களை சராமாரியாக தாக்கிய சம்பவம் மற்றும் கற்களை வீசியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரின் முக்கியப் பகுதியாக தெப்பக்குளம் பகுதி விளங்கி வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இப்பகுதியில் காவல் துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர்.
அப்போது, அந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பலர் அந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், அங்கு ஒரு கும்பலைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களது வகுப்பிலேயே பயிலும் இரண்டு மாணவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் கடுமையாக காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த விடியோ காட்சியில், அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர். அப்போது, இரண்டு கும்பலாகச் சேர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு மாணவரையும் தனித்தனி குழுக்களாக தாக்குகின்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவர்கள் மூக்கில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட தங்களுடைய பேக்கை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து, துரத்தி துரத்தி தாக்கும் மாணவர்கள் திடீரென கற்களை எடுத்து அவர்கள் மீது வீசத் தொடங்கினர். இச்சம்பவம் வாகனஓட்டிகள் மற்றும், பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிச் சீருடையில் எந்தவிதமான ஒரு பதட்டமும் இல்லாமல் பொதுவெளியில் மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications