அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திர பதிவு செய்யும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்-மதுரை கோர்ட்
மதுரை: தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, ''அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் யார்? என்பதை கண்டறிந்து அவரை பணிநீக்கம் செய்வதோடு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன்.
இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அங்கீகரிக்கப்படாத மனைகளை
அதில், ''வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசிடம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு மனை விற்பனை நடைபெற்று வருகிறது என்றும் அரசிடம் உரிய அனுமதி பெறாமலும் அங்கீகரிக்கப்படாமலும் உள்ள மனைகள் பத்திரப்பதிவு செய்யபடுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டமே உள்ள நிலையில், இதுபோன்று விற்பனை நடைபெற்று வருகிறது. சட்ட விதிகள் எதையும் முறையாக கடைபிடிக்காமல் தேனி சார் பதிவாளர் ஆபிசில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்று இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்
எனவே முறைகேடாக நடைபெற்ற இந்த பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜெ.சத்தியநாரயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. இந்த மனு மீது இன்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

பணிநீக்கம் செய்வதோடு..
''முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இருந்தாலும் இதுவரை கைது செய்யவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பேரூராட்சியால் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் யார்? என்பதை கண்டறிந்து அவரை பணிநீக்கம் செய்வதோடு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

சமர்பிக்க வேண்டும்
அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப்பதிவு தொடர்பான அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திர பதிவு தொடரும் பட்சத்தில் துறை செயலாளார்கள் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும். சார் பதிவாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 22 ஆம் தேதி அறிக்கையாக பதிவுத்துறை தலைவர் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
தரையிறங்க தாழ்வாக பறந்த விமானத்தால்.. 100 வீடுகளின் மேற்கூரைக்கு நேர்ந்த கதி.. அலறியடித்த மக்கள் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications