"அரசியலை தாண்டி எல்லோரையும் மதிக்க வேண்டும்".. விஜய் மாநாட்டு பேச்சு குறித்து நடிகர் சூரி கருத்து!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தது பற்றிய கேள்விக்கு நடிகர் சூரி பதில் அளித்துள்ளார்.
நடிகர் சூரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். சூரி, மதுரை ராசாக்கூர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார். அங்கு சூரி தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் சூரியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூரி, "எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன் லட்சுமணன் போல நானும் என் தம்பியும் இரட்டைப் பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறி உள்ளது. நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு, எனது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள்தான் முழு காரணம்" என்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் ஸ்டாலின் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தது பற்றி சூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சூரி, "இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும், எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலைத் தாண்டி, எல்லாரும் எல்லாரையும் மதிக்க வேண்டும். இன்று விஜய் நடிப்பில் இருந்து ஒதுங்கி அரசியலுக்குப் போயிருக்கிறார்.
அடுத்து திருப்பி வரலாம். அனைவருக்கும் விஜய்யைப் பிடிக்கும். எனக்கும் அவரைப் பிடிக்கும், என்னையும் அவருக்குப் பிடிக்கும். அவர் அரசியலுக்குச் சென்றுள்ளது அவருடைய விருப்பம்" என்று சூரி தெரிவித்தார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!












Click it and Unblock the Notifications