மதுரைக்கு போன சுஹாசினி.. வீடு வாங்க செம வாய்ப்பு இருக்கே? சொத்து ரியல் எஸ்டேட் கண்காட்சியில் அதிரடி
மதுரை : ''வீடு வாங்குவது மக்களின் கனவாக உள்ளது,'' என இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில் மதுரை தமுக்கம் கன்வென்ஷன் ஹாலில் நடைபெறும் வீடு மற்றும் வீட்டடி மனைகள் (பேர்புரோ புராப்பட்டீ எக்ஸ்போ 2025) கண்காட்சியில் நடிகர் சரத்குமார் பேசினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான 'கிரடாய்' சார்பில் 'பேர்புரோ பிராப்பர்ட்டீஸ்' கண்காட்சி 3 நாட்கள் நடந்தது. மதுரை தமுக்கம் கன்வென்ஷன் ஹாலில், வீடு மற்றும் வீட்டடி மனைகள் (பேர்புரோ புராப்பட்டீ எக்ஸ்போ 2025) இந்த நாள் கண்காட்சி நடைபெற்றது.

கடந்த ஜனவரி 31 ல் துவங்கிய இந்த கண்காட்சியில், மதுரை, கோவை, சென்னையை சேர்ந்த 35 டெவலப்பர்கள், கான்கிரீட், பிளம்பிங், "எம்" சாண்ட், ஜல்லி, உள் அலங்காரம், மின்சாதனம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், வங்கிகள், நிதி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன .. ரூ.19.9 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீடுகள், ரூ.3 லட்சம் முதல் வீட்டடி மனைகளை (பிளாட்களை) தேர்வு செய்யப்பட்டன..
கண்காட்சி: பிளாட்கள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.. இந்த கண்காட்சியில் பார்வையாளர்களில் தினமும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசாக ரூ.3 லட்சம் மதிப்பில் பிளாட்கள் வழங்கப்பட்டன. இங்கு வீடுகள், பிளாட்டுகளை நேரடியாக பார்வையிட வாகன வசதியும், வங்கிக் கடன் வசதி உண்டு.
இந்நிலையில், "பசுமை வீடுகள்" தலைப்பில் நடிகர் சரத்குமார் பேசும்போது, "வீடு வாங்குவது மக்களின் கனவாக உள்ளது. சொந்த வீடு அவசியம். ராக்கெட் வேகத்தில் அனைத்து விலைகளும் ஏறுகின்றன. பட்ஜெட்டிற்கு ஏற்ற வீடு வாங்க நகரத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டியுள்ளது. வீடு வாங்குவதில் சோதனைகளை சந்திப்பது பற்றிய கதையான "3 பிஎச்கே" படத்தில் நான் தற்போது நடித்து கொண்டிருக்கிறேன்.
விடாமுயற்சி: அதிக செலவின்றி, தரமான வீடு, சரியான இடத்தில் கட்ட வேண்டும் என்பது இளைஞர்களின் லட்சியமாக உள்ளது.. புவி வெப்பமடைதலால் பாதிப்பு ஏற்படாதவாறு பசுமை வீடுகளை கட்ட வேண்டும். கிராமங்களில் வீடுகள் கட்டும் திட்டம், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க முயற்சி தேவை. வாழ்க்கையில் முன்னேற உழைப்பு, நியாயம், உறுதி, விடா முயற்சி அவசியம்" என்றார்.
அதேபோல, கிரடாய் விளம்பர தூதர் நடிகை சுகாசினி, இந்த கண்காட்சியில் பேசும்போது, "மதுரை என்றாலே வீரம்.. மதுரைக்கும் எனக்கும் உள்ள உறவு அளப்பரியது. நான் இங்குதான் காலேஜ் படித்தேன். அந்த கல்லுாரி நாட்கள் என்னால் மறக்கவே முடியாது.
கனவு இல்லங்கள்: பெண்கள் எந்த வேலையையும் துரிதமாக, சரியாக செய்வார்கள்.. அந்தவகையில், வீடுவாங்க நினைக்கும் குடும்பத்திற்கும், அவர்கள் தேவைக்கேற்பவும் கட்டமைக்கும் நிறுவனத்திற்குமான உரையாடல்தான் உலகிலேயே மிகச்சிறந்தது. அன்றைய காலத்தில் வீடுகட்டுவது, டாக்குமென்டுகள் தயார் செய்வது மிகவும் கடினமானதாக இருந்தது. இன்று நம்பகமான முறையில் கனவு இல்லங்களை உருவாக்குதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications