“அண்ணாமலை என்ன.. ஆண்டவனே வந்தாலும் ம்ஹூம்.. எடப்பாடி அப்படி செஞ்சிருக்காரு” - சீண்டிய செல்லூர் ராஜூ!

Subscribe to Oneindia Tamil

மதுரை : தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க விலக்கு கோரி பாஜக மாநிலத் தலைவர் கேட்டதால் டெண்டரை ரத்து செய்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்தது குறித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அண்ணாமலை என்ன.. ஆண்டவனே கேட்டாலும் இந்த திட்டத்தை நடத்த முடியாது.. அண்ணாமலை என்ன இதா?" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியில், வடசேரி, சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ADMK ex minister sellur raju takes on annamalai on coal mines issue

தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

நிலக்கரி சுரங்க திட்டம் : தமிழ்நாட்டின் மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிலக்கரி, சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அண்ணாமலை என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழ்நாட்டின் 3 சுரங்கங்களை நீக்குமாறு பரிந்துரைத்துள்ளேன் என்று தெரிவித்தார் அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

ADMK ex minister sellur raju takes on annamalai on coal mines issue

தமிழ்நாட்டிற்கு விலக்கு : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.' எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறினார்.

உரிமை கோரிய கட்சிகள் : இன்னொரு பக்கம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "மத்திய சுரங்கத் துறை அமைச்சர், தமிழ்நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக அறிவித்தது, தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, அதிமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

ADMK ex minister sellur raju takes on annamalai on coal mines issue

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதம் பற்றியும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஒருமித்த எதிர்ப்பு குறித்தும் மத்திய அமைச்சர் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், உண்மையில் தங்கள் நலனுக்காக யார் வேலை செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு திமுக, அதிமுக, தமிழ்நாடு பாஜக என பல கட்சிகள் நிலக்கரி சுரங்க அனுமதி ரத்து நடவடிக்கை தங்களுக்கு கிடைத்த வெற்றி என சொந்தம் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

அண்ணாமலை என்ன : நிலக்கரி சுரங்க திட்டம் திரும்பப் பெறப்பட்டது முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்ற அமைச்சர் உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு,, "உதயநிதி ஸ்டாலின் எதைத்தான் சொல்லவில்லை, நீட்டை முதல் கையெழுத்திலேயே ஒழிப்பார் ஸ்டாலின் என்றார். பொய்களை சொல்லி வாக்குகளை சேகரித்தார். தனது அப்பாவை புகழ்வது தான் உதயநிதியின் வழக்கமாக உள்ளது" என்றார்.

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் குறித்து அண்ணாமலை கோரிக்கை வைத்ததால் தான் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிவிட்டது பற்றிய கேள்விக்கு, "டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்ததன் காரணமாகத்தான் மத்திய அரசு இந்த திட்டத்தைக் கைவிட்டுள்ளது. அண்ணாமலை என்னங்க.. ஆண்டவனே நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆண்டவனே கேட்டாலும் இத்திட்டத்தை நடத்த முடியாது. அண்ணாமலை என்ன இதா?" என்றார் செல்லூர் ராஜூ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+