வாரிசு படம்.. விஜய்க்கு பதில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும்.. செல்லூர் ராஜூ கலகல பேச்சு

Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும். அதற்கு கதை கலைஞர் கருணாநிதியும், திரைக்கதை ஸ்டாலினாக தான் இருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார்.

அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே ஒற்றை தலைமை தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

ஓ பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு துவக்க விழா தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் பொதுக்கூட்டம்

மதுரையில் பொதுக்கூட்டம்

மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் அதிமுக அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் கலகலப்பாகவும் பேசினார். இதில் செல்லூர் ராஜூ பேசியதாவது:

அதிமுகவில் சோதனை

அதிமுகவில் சோதனை

எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுக கழகம் உருவானது. இந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்தது தான். கடந்த 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியாக அதிமுக திகழ்கிறது. ஏனென்றால் இது மக்களுக்கான இயக்கமாகும். எம்ஜிஆர்க்கு பின் அதிமுக அழியும் என கருணாநிதி உள்பட அனைவரும் நினைத்தார்கள். அது நடக்கவில்லை. அதிமுக பலமுறை பிரிந்து பலமுறை இணைந்தும் இருக்கிறது அதிமுகவில் இன்றைக்கும் அத்தகைய சோதனை தான் நடக்கிறது.

நீட் ரத்து செய்யாத திமுக

நீட் ரத்து செய்யாத திமுக

எப்போது ஸ்டாலின் போவார். மீண்டும் எடப்பாடி எப்போது ஆட்சிக்கு வருவார்.. விடியல் தருவார் என மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். நீட் ரத்து செய்ய தான் முதல் கையெழுத்து என்றார்கள். ஆனால் இதுவரை ரத்து செய்யவில்லை. டாஸ்மாக் விற்பனையில் இலக்கு வைத்து விற்பனை செய்யும் அவல நிலையில் தான் திமுக ஆட்சி நடக்கிறது. திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் ஒன்று கூடிவிட்டனர். கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வெடித்ததை போல் தற்போது கார் வெடித்து உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரத்துக்கு இதுதான் சாட்சி.

 உதயநிதி ஸ்டாலின் நடிக்க...

உதயநிதி ஸ்டாலின் நடிக்க...

உதயநிதி ஸ்டாலின் என்றைக்கு செங்கலை தூக்கினாரோ அன்று முதல் செங்கல், கம்பி உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்து விட்டது. நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் தான் அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும். கதை கருணாநிதியாகவும், திரைக்கதை ஸ்டாலினாகவும் தான் இருக்க வேண்டும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+