என்ன சார் சொல்றீங்க..? - அதிமுக-வில் தலைமையே கிடையாதா? -செல்லூர் ராஜூ சொல்லும் புது விளக்கம்
மதுரை: அதிமுக-வில் தலைமையே கிடையாது. இப்போது இருப்பவர்களை, கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஒன்றைக் கூட அதிமுக கைப்பற்றவில்லை.
மேலும் பல மாவட்டங்களில் முழுவதுமாக வாஷ்-அவுட் ஆனது அதிமுக. இதனால் அதிமுக தொண்டர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதிமுக இந்த தேர்தலை தனியாக எதிர்கொண்டது. இந்த தோல்வி எதிர்பார்த்தது தான் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் முதலிடத்தில் இருக்கும் திமுகவுக்கும், இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிமுகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

செல்லூர் ராஜூ
இந்நிலையில், இன்று அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை, அதிமுக கொண்டாடியது. மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''அதிமுகவில் தற்போது தலைமையே இல்லை. இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுக திமுகவில் சங்கமமாகிவிடும் என ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம்.

அதிமுக
அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை; வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும்; மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது. பாஜக வளரும் கட்சி என்பதால் 3வது பெரியகட்சி என அண்ணாமலை சொல்கிறார். நடந்து முடிந்த தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக தன்னுடைய பணபலத்தால் வெற்றியை பெற்றுள்ளது'' என்றார்.

தேர்தல்
அதிமுக சட்டசபைத் தேர்தலில் தோற்றிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஓரளவு வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவின் கோட்டையான கோவையில் திமுக ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாகவும், ரவுடிகளை திமுக இறக்கி இருப்பதாகவும் பாதுகாப்புக்கு ராணுவத்தைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டது அதிமுக. அதேபோல், தேர்தல் நாளன்று திமுக கள்ள ஓட்டுப் போடுவதாக சொல்லி, திமுக நபரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இத்தனை களேபரங்களுக்கு இடையே தேர்தலை எதிர்கொண்டது அதிமுக.

முடிவுகள்
அதிமுக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் டெபாசிட் கூட அதிமுக வேட்பாளர்கள் பெறவில்லை. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதிமுக. அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால் தான் இந்தத் தோல்வி என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு தலைமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications