Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ருசியில்லாத உணவு.. அண்டா அண்டாவாக மதுரை மண்ணில் கொட்டப்பட்ட அவலம்.. டாஸ்மாக்கில் குவிந்த தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு தயாரிக்கப்பட்ட உணவுகள் ருசியாக இல்லாத காரணத்தால் அவற்றை சாப்பிடாமல் தொண்டர்கள் புறக்கணித்தனர். இதனால் அண்டா, அண்டாவாக மீதமான உணவுகள் மாநாட்டுத் திடலில் மண்ணில் கொட்டப்பட்டுள்ளது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

மதுரை விமான நிலையம் அருகே அதிமுகவின் பொன்விழா மாநாடு எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டம் தீட்டி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக உழைத்து மாநாட்டை ஏற்பாடு செய்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரையே திமிலோகப்பட்டது.

ADMK Manadu: Tasteless food in Manadu food Wretched in the Madurai ground

மதுரையில் நேற்று அதிமுக மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, ஹெலிகாப்டர் மூலம் 1 டன் எடையிலான பூக்கள் அங்கு தூவப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களுக்கு, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 3 வேளை சிறப்பான உணவு வழங்கப்படும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக செல்லூர் ராஜூ மாநாட்டில் கொடுக்கப்படும் உணவுகள், வகை வகையாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். மக்கள் வியந்து போகும், அளவிற்கு சாப்பாடு சுவையாக இருக்கும் என்றார்.

இந்த உணவு தயாரிக்கும் பணிகள் சனிக்கிழமை இரவு முதலே தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. மாநாடு நடைபெற்ற மைதானத்தில் இரு புறத்திலும் உணவுகள் தயாரிக்கப்பட்டன. அங்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் சுவையாக இல்லாததாலும், உணவு வேகாததாலும், தொண்டர்கள் இந்த உணவை சாப்பிடாமல் சென்றதால் டன் கணக்கில் உணவு அந்த திடலில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ADMK Manadu: Tasteless food in Manadu food Wretched in the Madurai ground

மாநாட்டில் கொடுக்கப்பட்ட உணவு உப்பு சப்பில்லாத சாம்பார் சாதமாகவும், பச்சை வாசனை வீசும் புளியோதரையாகவும் இருந்தது. இதனால் பசியோடு வந்த அதிமுக தொண்டர்கள் உண்ண முடியாமல் உணவுகளை கீழே கொட்டிவிட்டு சென்றனர். ஹெலிஹாப்டரில் பூவெல்லாம் கொட்டியது எல்லாம் நன்றாக தான் இருந்தது. ஆனால் உங்களை நம்பி வந்த தொண்டர்களுக்கு தரமான உணவை கொடுக்காமல் ஏமாற்றி விட்டீர்களே என்று அங்கிருந்த தொண்டர்கள் பலரும் வேதனை தெரிவித்தனர்.

பல லட்சம் தொண்டர்கள் மதுரையில் குவிந்ததாக கூறப்பட்ட நிலையில் எல்லோருக்கும் உணவு கொடுத்திருந்தால் உணவு தட்டுப்பாடே ஏற்பட்டிருக்கு ஆனால் உணவு சரியில்லாததால் அவர்கள் புளியோதரையை சாப்பிடவில்லை என தெரிகிறது.

மதிய சாப்பாட்டுக்கு புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் தயார் செய்யப்பட்டிருந்தது. அதிகமான நபர்கள் வந்திருந்ததால் சாப்பாடு வாங்குவதற்காக போட்டி போட்டுக்கொண்டு சாப்பாடு வாங்க அதிமுகவினர் முண்டியடித்தனர். மேலும் சாப்பாடு வாங்கியவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு இட வசதி ஏதும் செய்யாததால் கடும் வெயிலில் நின்றபடி சாப்பிட்டு ஆங்காங்கே சாப்பாட்டை தூக்கி எறிந்து சென்றனர்.

புளியோதரை சரியில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் சமையல் கூடத்தில் உள்ளே புகுந்து பசியை போக்கிக் கொள்ள மீதம் இருந்த சாம்பாரை அள்ளி குடித்தனர். அதேபோல் சாம்பாரில் இருந்த காய்களையும் கரண்டி போட்டு முண்டியடித்து அள்ளி குடித்தனர். மேலும் ஒரு சிலர் கோபத்தின் உச்சிக்கு சென்று சமைக்காமல் வைத்திருந்த அரிசி மூட்டைகளை தூக்கி சென்றனர். மேலும் சமையல் மசாலா பொடிகள், காய்கறிகளையும் சாப்பிடுவதற்கு வைத்திருந்த சாப்பாட்டு தட்டுகளையும் மூட்ட மூட்டையாக அள்ளி சென்றனர்.

இந்த மநாட்டிற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டிற்கு வரவழைக்க, ஜெயிலர் பட டிக்கெட்டிகள் இலவசமாக வழங்கியிருந்தார். இந்த நிலையில், மதுரை அதிமுக மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ரூ.100 கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ADMK Manadu: Tasteless food in Manadu food Wretched in the Madurai ground

பணத்தை வாங்கிய தொண்டர்கள் அனைவரும் மாலையிலேயே சொந்த ஊருக்கு திரும்பினர். போகும் வழியிலேயே புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் அதிமுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் மாலையிலே ஊர் திரும்பியதால் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட புளியோதரை அண்டா அண்டாவாக மிச்சமானது. இதனால் மாநாட்டு திடலில் அவை டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது மலர் தூவ ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தவர்கள் உணவில் கவனம் வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+