கூலித் தொழிலாளியின் மகள் 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை.. குவியும் பாராட்டு!
மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் இந்த தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55% என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 91.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளர்.
மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றும், மாணவர்கள் 88.58% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 மாணவிகள் 500க்கு 499 மதிபெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
499 மதிப்”பெண்கள்”..தமிழில் ஒரு மார்க் மிஸ்..10th ரிசல்ட்டில் தமிழகத்திலேயே முதலிடம் யார் தெரியுமா?
மதுரை உசிலம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். அரசுப் பள்ளியில் படித்த மாணவி சுஸ்யா சிறப்பாகப் படித்து சாதித்துக் காட்டியுள்ளார். அவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் செண்டம் எடுத்துள்ளார்.
விவசாய கூலித் தொழிலாளி தந்தை, அங்கன்வாடியில் பணியாற்றும் தாய்க்கு மகளான சுஷ்யா, கஷ்டப்பட்டு படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவர் படித்த பள்ளி பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள் மாணவி சுஸ்யாவை பாராட்டி வருகின்றனர்.
தனது பெற்றோர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலமே அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததாகவும், குடும்பத்தினரின் ஆசைப்படி மருத்துவர் ஆவதே தனது கனவு என்றும் சுஸ்யா தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ஆம் தேதி மறுதேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு வரும் 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications