499 மதிப்”பெண்கள்”..தமிழில் ஒரு மார்க் மிஸ்..10th ரிசல்ட்டில் தமிழகத்திலேயே முதலிடம் யார் தெரியுமா?
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி 3 மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்களை பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர்.

தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகள்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55% ஆகவுள்ளது. கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3 மாணவிகள்: தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி 3 மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்களை பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக்க்ஷயா பள்ளி மாணவி காவியாஶ்ரீ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் மொழிப் பாடத்தில் 99 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 100 கணக்கில் நூறு அறிவியலில் நூறு சமூக அறிவியலில் நூறு என மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார் தமிழைத் தவிர அனைத்து பாடங்களிலும் இவர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துகள்: தமிழகத்திலேயே முதல் இடம் பிடித்ததை தொடர்ந்து மாணவி காவியா ஸ்ரீக்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவியான சஞ்சனா அனுஷ் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடத்தை காவியா ஸ்ரீயுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

4 பாடங்களில் சதம்: இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கமுதியைச் சேர்ந்த மாணவி காவியஜனனி 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 99, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications