மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை… அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கே.எஸ். அழகிரி விமர்சனம்
மதுரை: மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து உள்ளதாக அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இந்தியாவினுடைய பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் வீணாக்கிய ஒரு கூட்டணி .
தமிழகத்தில் ஊழல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சியும், மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை கொண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. எனவே , அந்தக் கூட்டணி மக்களுடைய நம்பிக்கையைப் பெற முடியாது என்பது என்னுடைய கருத்து.

மோடி பிரச்சாரம்
மோடி தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்கிற பொழுது தமிழருடைய கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறார். தமிழ்மொழியை பற்றி பேசுகிறார் . ஆனால் தமிழகத்திலேயே அவர்கள் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கிடையாது.

தேசப்பற்று கிடையாது
ஒரு நாட்டினுடைய பிரதம மந்திரியும், முதலமைச்சரும் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து கிடையாது தேசியகீதம் கிடையாது என்று சொன்னால் அவர்களுடைய தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு அக்கறை இல்லாத ஒரு கூட்டம் .

மோடிக்கு கேள்வி
அரசியல் சம்பந்தமான ரபேல் ஊழல் வழக்கில் ராணுவத்தினுடைய கோப்புகள் காணாமல் போயிருக்கின்றன. ராணுவத்தினுடைய கோப்புகளை பாதுகாக்க முடியாத மோடி அரசாங்கம், இந்தியாவுக்கு பாதுகாப்பு அளிக்குமா என்பதை காங்கிரசின் வாயிலாக நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

சிறிய நிலப்பரப்பு
தமிழகத்திலேயே வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். தமிழகத்தினுடைய நிலப்பரப்பை விட சிறிய நிலப்பரப்பான இங்கிலாந்து, ஜப்பான் தென் கொரியா நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சி, ஏன் தமிழகத்தில் கொண்டுவர முடியாது என்பது தான் காங்கிரஸ் கட்சியினுடைய கேள்வி.

வளர்ச்சி நிறைந்த மாநிலம்
எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னால் தமிழகத்தை ஒரு வளர்ச்சி நிறைந்த மாநிலமாக எங்களால் ஆக்கிக் காட்ட முடியும் . கூட்டணிக் கட்சிகள் அதற்காக பாடுபடுவார்கள், செயல்படுவார்கள் . எங்களுடைய தேர்தல் அறிக்கை வளர்ச்சி என்பதை மையமாகக் கொண்டது தான் .

தேர்தல் அறிக்கை
எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு அம்சம் தான் . எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட ஒன்று . எனவே அந்த வகையில் எங்களுடைய தேர்தல் அறிக்கை தமிழகத்திலும், இந்தியாவிலும் சிறப்பாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications