எடப்பாடி காரில் போன "சீக்ரெட்" பைல்.. இன்று மாலை உடைக்கப்படும் ரகசியம்.. ப்பா இது ஜெயலலிதா ஸ்டைல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடக்க உள்ள அதிமுக மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மிக சீக்ரெட்டாக சில பைல்களை கொண்டு சென்றுள்ளார் எடப்பாடி.

அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இன்று காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. காலையில் இருந்து கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

 AIADMK Madurai meeting: Edappadi Palanisamy is carrying a secret file of resolutions to be passed today

அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக, அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.

இன்றைய நிகழ்வில் முக்கிய தீர்மானங்கள் பல வர உள்ளன. அதிமுகவின் லோக்சபா தேர்தல் திட்டங்கள் தொடர்பாக எடப்பாடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். முக்கியமாக் கட்சியின் எதிர்காலம் தொடர்பாகவும், லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து உள்ளன. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

சீக்ரெட்: இந்த கூட்டத்திற்கு காரில் வந்த எடப்பாடி பழனிசாமி கூடவே பை ஒன்றை எடுத்து வந்துள்ளார். காரில் பை ஒன்றை சீக்ரெட்டாக கொண்டு வந்துள்ளார். இந்த பையில் தான் இன்று நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் உள்ளன.

இந்த தீர்மானங்கள் குறித்த சின்ன விஷயம் கூட வெளியே கசியவில்லையாம். இதை ஜெயலலிதா பாணியில் முழுக்க முழுக்க எடப்பாடி கைப்பட தயாரித்து இருக்கிறாராம். ஜெயலலிதா காலத்தில் சில தீர்மானங்கள் இப்படித்தான் சீக்ரெட்டாக கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாமல் நிறைவேற்றப்படும். அப்படித்தான் இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட உள்ளதாம்.

இதில் தீர்மான குழு தலைவராக பொன்னையன் உள்ளார். அதேபோல் அந்த குழுவில் தம்பிதுரை, ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மூன்று பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு சில ஐடியாக்களை கொடுத்துள்ளனர்.

அதை எல்லாம் வாங்கிக்கொண்டு சேலத்தில் உள்ள தனது நெடுஞ்சாலை வீட்டில் சின்ன விஷயம் கூட கசியாமல் எடப்பாடி பழனிசாமி தீர்மானங்களை உருவாக்கி உள்ளாராம். இன்று மாலைதான் இந்த தீர்மானங்களில் என்ன இருக்கிறது என்று தெரிய வரும். இதை காரில் அவர் சீக்ரெட்டாக கொண்டு வந்துள்ளார்.

நிகழ்ச்சிகள்: இன்று காலை முதல் இந்த கூட்டத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தலைவர்கள் உரை நிகழ்த்துவார்கள். 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்துவார். 7.30 மணிக்கு முன்பாக நிகழ்வுகள் முடிந்து உணவு வழங்கப்படும்.

இன்று மூன்று வேளையும் சைவ உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ளன. கிட்டத்தட்ட 3 ஆயிரம் சமையல் கலைஞர்கள் சேர்ந்து இந்த முறை உணவு தயார் செய்துள்ளனர்.

மாநாடு பின்னணி: இந்த மாநாட்டிற்காக 100 டன் அரிசி வாங்கப்பட்டு உள்ளது. அதேபோல் 300 டன் காய்கறிகள் வைக்கப்பட்டு உள்ளது. 100 டன் பருப்பு வாங்கப்பட்டு உள்ளது. இந்த எழுச்சி மாநாட்டிற்காக கிட்டத்தட்ட 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் மேடை மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+