திருப்பரங்குன்றம் அமைதி பேச்சுவார்த்தை.. அதிமுக வராதது ஏன்? ஆட்சியர் குற்றச்சாட்டுக்கு அதிமுக பதில்!
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுகவின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் காரணமாக பிப்.3 மற்றும் பிப்.4 ஆகிய தேதிகளில் மதுரையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் சுமூகமான சூழல் ஏற்பட்டிருந்தாலும், திடீரென உருவான சர்ச்சைக்கு மாவட்ட நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தரப்பில் திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மதுரை திருப்பரங்குன்றம் மலையில் டிச. 25ல் அதிகாலை 3 மணியளவில் கந்தூரி கொடுக்க மலை ஏற சென்றவர்களை, காவலர்கள் தடுத்ததால் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து டிச.31ல் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
இதில் நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஜன.18ல் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, மலைமீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி கொடுப்பதற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இது மறுக்கப்பட்டது. இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தை ஜன.30ல் நடைபெற்றது.
இதில், திருப்பரங்குன்றம் நகரை சேர்ந்த இரு சமூகத்தினரும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என அனைவரும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். அதிமுக பிரதிநிதி மட்டும் கையெழுத்திட மறுத்து சென்றார்.
திருப்பரங்குன்றம் கிராமப் பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும் மதச்சார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், மத நல்லிணக்கத்தை பேணவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதில் அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக பிரதிநிதி கையெழுத்திடாமல் சென்றதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன காரணத்திற்காக அதிமுக பிரதிநிதி கையெழுத்திடாமல் சென்றார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ-வும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான ராஜன் செல்லப்பா பதில் அளித்துள்ளார்.
அதில், மாவட்ட ஆட்சியர் தரப்பில் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத நாங்கள் கையெழுத்திடவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியுள்ளார். வேண்டுமென்றே அதிமுகவின் பெயரை கெடுக்கும் வகையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications