திமுக எனும் கார்ப்பரேட் கம்பெனி! அன்று கருணாநிதி.. இன்று ஸ்டாலின்! அப்பறம்.. செல்லூர் ராஜு சுளீர்.!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக என்னும் கார்ப்பரேட் கம்பெனியின் மேனேஜராக அன்று கருணாநிதி இருந்தார். தற்போது முக ஸ்டாலின் இருக்கிறார்.. இனி அவருடைய மகன் உதயநிதி வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் செலவில் மதுரை பழங்காநத்தத்தில் புதிய நியாய விலை கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

Sellur Raju AIADMK mk stalin

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," மத்திய அரசை கண்டித்து திமுக அரசு போராட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார்கள். மக்களை ஏமாற்றும் ஒரு நாடகம் தான் இந்த ஆர்ப்பாட்டம். திமுகவிற்கு தங்களது குடும்ப மட்டுமே முக்கியம், மக்கள் பிரச்சினையில் அக்கறை இல்லை.

கச்சத்தீவு மீட்பது, முல்லை பெரியாறு அணை மீட்பு, இது போன்றவைகளில் முதல்வருக்கு கவனம் இல்லை. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் டெல்லி நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பற்றி பேசவில்லை. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் செங்கோல் பற்றி பேசிவருகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை குறித்து பேசவில்லை,
பஜ்ஜெட் குறித்து பேசவில்லை.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பட்டப்பகலில் கொலை, கொள்ளை மதுரையில் 2 வாரத்தில் 14 கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ளது. மத்திய அரசின் பஞ்ஜெட் தாக்கல் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பஜ்ஜெட் அறிக்கை முழுமையாக வந்த பிறகு தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன் என்பது குறித்து கண்டனம் குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என்றார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றவில்லை.

ஆயிரம் ரூபாய் கொடுக்க பெண்களிடம் ஆயிரம் கண்டிஷன் போடுகிறார்கள். 3 வருடம் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை. உள்ளாட்சி துறை சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டது உணவு பொருட்கள் கூட்டுறவு துறையில் வாங்கப்பட்டது. அம்மா உணவகத்தை தேர்தல் நெருங்குவதல் ஆய்வு நடத்துகிறார் முதல்வர். தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்ததை முற்றிலுமாக திமுக ஆட்சிக்கு வந்து முடங்கியுள்ளது.

OPS அதிமுக இணைத்தால் போதும் பொறுப்பு வேண்டாம் என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் பார்த்து கொள்வார். நீதிமன்றத்தில் பொது செயலாளர் குறித்து தொடுக்கப்பட்ட பல வழக்கில் பொது செயலாளர் என எத்தனையோ தீர்ப்பு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக தொண்டர்கள் பொது செயலாளர் என ஏற்றுக்கொண்டோம்.

3 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டனம் உயர்வு. திமுக அடுத்தாண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவார்கள். ஸ்டாலின் எதிர்க்கட்சி என்றால் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு பலூன். ஆளும்கட்சி என்றால் வெள்ளை கொடை பிடிப்பது இதுதான் ஸ்டாலின் நடத்தும் நாடகம் தான். உதயநிதி ஸ்டாலினே திமுகவில் திணிக்கப்பட்டவர் தான். மூத்த தலைவர்களே கூட இன்ப நிதியை கூட தோளில் சுமக்க தயாராக இருக்கிறோம் என கூறி இருக்கிறார்கள். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி.


அங்கு வாரிசு அரசியல் தான் இருக்கிறது. அதிமுக தான் ஜனநாயக கட்சி. திமுக என்னும் கார்ப்பரேட் கம்பெனியின் மேனேஜராக அன்று கருணாநிதி இருந்தார். தற்போது முக ஸ்டாலின் இருக்கிறார். இனி அவருடைய மகன் உதயநிதி வருவார். அந்த கட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் எந்த துறையும் சுதந்திரமாக ஜனநாயக முறைப்படி இயங்குவது கிடையாது.

அனைவரும் பயந்து கொண்டுதான் உள்ளார்கள் தற்போது ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கு மட்டும் தான் படம் கொடுக்க வேண்டும். அவர்களது தொலைக்காட்சிக்கு தான் உரிமையை கொடுக்க முடியும். அப்படி இருந்தால் தான் திரையரங்கு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி உள்ளார்கள். மினிமம் பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய படங்கள் தற்போது ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளது. காரணம் திரையரங்கு கிடைப்பதில்லை திரையரங்கு யாரிடம் இருக்கிறது உதயநிதியிடம் தான் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+