அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்
Recommended Video
மதுரை: அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கருணாஸ். முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் தலைவரான கருணாஸ், அவ்வப்போது தடாலடியாக பேசி வருகிறார். அதனால், அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைப்பதாக கூறப்பட்டாலும், சிக்கலும் சேர்ந்தே வருகிறது.

இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அமைதியாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ ஒரு நிலையான அரசு வேண்டும் என பாஜகவுக்கு எதிராக கூறினார்.
5 ஆண்டு கால ஆட்சியில் பாஜக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என விமர்சித்த கருணாஸ், அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்றார்.
இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்களின் மனநிலையை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதற்கு பதிலளித்த கருணாஸ், மக்கள் மத்தியில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதாக தெரிவித்தார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications