அஜித்குமார் கஸ்டடி மரண வழக்கு.. தனிப்படை போலீசாரின் ஜாமீன் மனு.. ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு!
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் தனிப்படை காவலர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த ஜூன் 28 ஆம் தேதி அடித்தே கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது. சிபிஐ விசாரணை நடத்தி தனிப்படை காவல் வேன் ஓட்டுநரை 6-வது குற்றவாளியாக சேர்த்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிபிஐ கடந்த வாரம் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அஜித்குமார் காவல் மரணம் வழக்கில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், இந்த வழக்கில் தங்களுக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம். சிபிஐ விசாரணையை முடித்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 168 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளோம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். முன்னதாக, டிஎஸ்பி சண்முக சுந்தரம் முன் ஜாமீன் கோரிய மனுவிலும், சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications