மதுரையே தவிக்குது.. அந்த பைக்கை வேற காணோம்.. அம்மாவின் சென்ட்டிமென்ட்டால் தவிக்கும் கார்த்திக்.. ஏன்
மதுரை: மதுரையில் இளைஞர் ஒருவர் ஒட்டியிருக்கும் போஸ்டர் மதுரை மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. அத்துடன் சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து தைரியம் சொல்லி வருகிறார்கள். என்ன நடந்தது? யாரிந்த இளைஞர்?
மதுரை மாநகர் காளவாசல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்.. 42 வயதாகிறது.. இவரது அப்பா வேல்முருகன், மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்தவர். ஆனால் அவர், கடந்த 1998லேயே இறந்துவிட்டதால், கார்த்திகேயனுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்துள்ளது.

கருப்பாயி: இதனால், மாநகராட்சி வேலைக்கு, கார்த்திகேயன் தினமும் நடந்துதான் சென்றுவந்தார்.. இதைப்பார்த்து மனம் வாடிய கார்த்திகேயனின் அம்மா கருப்பாயி, மகனுக்காக சீட்டு கட்டி, அந்த பணத்தில் டூவீலர் ஒன்றை, கடந்த 2002-ல் வாங்கிக் கொடுத்துள்ளார்.. அந்தவகையில், கடந்த 22 வருடங்களாகவே கார்த்திகேயன் அந்த பைக்கில்தான் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு, கொரோனா காலத்தில் கருப்பாயி இறந்துவிட்டார். இதனால், அம்மாவின் நினைவாகவே, அந்த பைக்கை பத்திரமாக வைத்து, போற்றி பாதுகாத்து வந்தார் கார்த்திகேயன்.. இந்நிலையில், கடந்த 12ம் தேதி மதுரை பைபாஸ் சாலை பகுதியிலுள்ள மருத்துவமனையில் தன்னுடைய உறவினரை சந்திக்க சென்றுள்ளார் கார்த்திகேயன்.
காணவில்லை : பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், உடனடியாக எஸ்எஸ்காலனி போலீஸில் புகார் தந்தார்.. போலீஸாரும், மருத்துவமனை பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். ஆனால், பைக் கிடைக்கவில்லை.
அந்த பைக் இப்போது வெறும் ரூ.5 ஆயிரம் இருக்கலாம். எனினும், தன்னுடைய அம்மாவின் நினைவாக வைத்திருந்த பைக் காணாமல் போனதால், கார்த்திகேயன் மனம் கலங்கி உள்ளார். போலீசார் ஒருபக்கம் தேடிவந்தாலும், தானும் சேர்ந்து தேட ஆரம்பித்தார்.. இதற்காக விளம்பரம் ஒன்றையும் தந்தார்.. எனவே, பைக்கின் போட்டோவுடன் கூடிய போஸ்டர் ஒன்றை அச்சடித்து மதுரையில் எல்லா பக்கங்களிலும் ஒட்டிவிட்டார்.
சன்மானம்: "இந்த பைக்கை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் கார்த்திகேயன்.. அத்துடன் தன்னுடைய போன் நம்பரையும் அதில் பதிவிட்டிருக்கிறார். பைக்கின் முன்பக்கத்தில் கார்த்தி என்ற பெயருடன், வேல் படம் ஒன்று வரையப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்த்திகேயன் சொல்லும்போது, "என்னுடைய அம்மாவை போல, அந்த டூவீலரை பத்திரமாக வைத்திருந்தேன்.. கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வைத்திருந்தேன்.. இப்போ காணாமல் போயிருச்சு. பைக்கை திருடியவர் என்னிடம் ஒப்படைத்துவிட்டால், ரூ.10 ஆயிரம் தருவேன். ஆனால், நோட்டீசை பார்த்துட்டு நிறைய பேர் எனக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.. ஆனால், திருடியவர் பேசவில்லை" என்கிறார் கார்த்திகேயன்.
ஆறுதல்: பைக் உங்களுக்கு அம்மாவே இருப்பதால், அந்தம்மா உங்களிடமே வந்து சேர்ந்துவிடும் என்று நோட்டீஸை பார்ப்பவர்கள் கார்த்தியிடம் ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லி வருகிறார்களாம்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications