அண்ணாமலை பயணித்த Indigo விமானத்தில் பிரச்சனை.. மதுரையில் தரையிறங்கும்போது திக்திக்.. பயணிகள் அலறல்
மதுரை: சென்னையில் இருந்து இன்று மதியம் மதுரைக்கு இண்டிகோ விமானம் சென்றது. இந்த விமானத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 100க்கும் அதிகமான பயணிகள் பயணித்தனர். மதுரை விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட பிரச்சனையால் மீண்டும் விமானம் உடனடியாக மேலெழும்பி பறந்தது. இதனால் பயணிகள் பயந்து அலறிய நிலையில் பைலட் பிரச்சனையை எடுத்துரைத்து அமைதிப்படுத்தினார். அதன்பிறகு விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
சென்னை - மதுரை இடையே விமான சேவைகள் உள்ளன. தினமும் ஏராளமான பயணிகள் இந்த விமானங்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மதியம் 12.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் மதுரைக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 100க்கும் அதிகமான பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் மதியம் 1.45 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான நிலையத்தை அடைந்தவுடன் விமானத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தின் சக்கரம் லேண்டிங் ஆனது. விமானம் தரையிறங்கிவிட்டது. அடுத்த சில நிமிடங்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்த பயணிகளுக்கு அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனென்றால் ஓடுபாதையில் லேண்டிங் ஆன விமானம் அடுத்த நொடியே மேல்நோக்கி பறக்க தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானம் தரையிறங்குவதில் பிரச்சனை வந்துவிட்டதாக கூறி பதற்றமாகினர். இதையடுத்து விமான பைலட் மைக் மூலமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
‛‛விமானம் தரையிறங்கும்போது அதிகப்படியான வெப்ப அலை உள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தை தரையிறக்கவில்லை. இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கப்படும்'' என்று பைலட் அறிவித்தார். இதனால் பயணிகள் சற்று நிம்மதியடைந்தனர். இருப்பினும் அவர்களின் மனநிலை திக்திக் என்று இருந்தது.
இதற்கிடையே விமான நிலைய ஓடு பாதையில் இருந்து மேலெழும்பிய இண்டிகோ விமானம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பிறகு 13 நிமிடங்கள் கழித்து இண்டிகோ விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனால் அண்ணாமலை உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவம் இன்று மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?










Click it and Unblock the Notifications