தொண்டர்களை மிரட்ட நீங்கள் யார்..? காரிலிருந்து இறங்கி காவல் ஆய்வாளரிடம் கடுகடுத்த அண்ணாமலை..!
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக தொண்டர்களை ஏன் மிரட்டுகிறீர்கள் எனக் கூறி, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காவல் ஆய்வாளரிடம் கடுகடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அண்ணாமலையை வரவேற்பதற்காக, உசிலம்பட்டியில் பாஜக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.
இதனிடையே தங்களுக்காக காரிலிருந்து இறங்கி காவல் ஆய்வாளரிடம் நியாயம் கேட்டதற்காக உசிலம்பட்டி பகுதி பாஜகவினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

அண்ணாமலை பயணம்
முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டி பாஜக சார்பில் தேனியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனிக்கு சென்றார். அப்போது அவருக்கு பல இடங்களில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.

உசிலம்பட்டியில் வரவேற்பு
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 25-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை வரவேற்பதற்காக காத்திருந்தனர். அவர்களை கண்டதும் காரை நிறுத்தி அவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை, பிறகு காரில் ஏறியிருக்கிறார். அவ்வாறு அவர் காரில் ஏறி அமர்வதற்குள் அங்கிருந்த கூட்டத்தை காவலர்கள் கலைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அண்ணாமலையிடம் கையில் பொன்னாடை கொடுக்க வந்த பாஜக தொண்டர் ஒருவரை காவல் ஆய்வாளர் அவர் அருகில் செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

மிரட்ட வேண்டாம்
இதனால் கடும் கோபம் அடைந்த அண்ணாமலை, திடீரென காரிலிருந்து இறங்கி தொண்டர்களை மிரட்டாதீர்கள் என எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களை தடுக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என காவல் ஆய்வாளரிடம் வினவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சற்று நிமிடம் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியிருக்கிறது. இதனிடையே தேனியில் ஆர்ப்பாட்டத்தை முடித்த கையோடு பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இல்லத்துக்கு சென்று சிறிதிநேரம் பேசிவிட்டு புறப்பட்டிருக்கிறார் அண்ணாமலை.

எதிர்பார்த்த கூட்டம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பார்த்த கூட்டம் திரண்டிருந்ததால் அண்ணாமலை மகிழ்ச்சியான மன நிலையிலேயே மதுரைக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications