மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற அரியலூர் இளைஞர் பலி! சோகத்தில் மூழ்கிய குடும்பம்
மதுரை: சமீபத்தில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய அரியலூரை சேர்ந்த இளைஞர் ஜெயசூர்யா, சாலை விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசூர்யா இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாநாட்டை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜெயசூர்யா, திருச்சி அருகே நடந்த விபத்தில் காயமடைந்தார். இந்த விபத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்த ஜெயசூர்யா இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஜெயசூர்யாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, தவெக ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மாநாட்டில் பங்கேற்க வந்து உயிரிழந்தது ஜெயசூர்யா மட்டும் கிடையாது. மாநாடு நடந்த தினத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஷன் உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ரோஷனை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் அவர் வீடு திரும்பும்போது சிகிச்சை உயிரிழந்திருக்கிறார். குன்னூரில் வசிக்கும் இவருக்கு ஒரு சகோதரி உண்டு. சர்க்கரை நோயால் பதிக்கப்பட்ட அவர், கடுமையான போராட்டங்களிடையே வாழ்ந்து வருகிறார்.
தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர், தந்தையோ குடிநோயாளி. இந்த குடும்பத்தை ரோஷன்தான் பார்த்து வந்தார். ஆனால் இப்போது அவர் இல்லை. அதேபோல சென்னையிலிருந்து மதுரை மாநாட்டுக்கு வந்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார். இதற்கு முன்னதாக மாநாட்டுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி மற்றொரு இளைஞர் பலியானார். இவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு என்ன என்பது கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications