Modi Temple: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.. பிரதமர் மோடி
மதுரை: மதுரை எண்.டி.ஏ கூட்டத்தில் பேசிய மோடி, திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும் போது எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறினார். மேலும் திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்தது தெய்வீக அனுபவமாக இருந்தது எனவும், தமிழக மக்கள் மற்றும் நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக நான் வேண்டினேன் என்றும் மோடி கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் தமிழகம் வருகை தந்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் மோடியின் வருகை அரசியலிலும் கவனம் பெற்றது.

திருப்பரங்குன்றத்தில் மோடி சாமி தரிசனம்
இன்று மதுரை வந்த பிரதமர் மோடி மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பிரதமர் மோடிக்கு கோயிலில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதன்பிறகு மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற எண்டி.ஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும் போது எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறினார். மோடி பேசியதாவது:-
இது தான் திமுக மாடல் அரசு
பிரதமர் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 6 லட்சம் வீடுகள் தமிழ்நாட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பணம் நமக்கு.. பிரச்சினை மக்களுக்கு.. இதுவே திமுக மாட்ல் அரசு. தேசிய ஜனநாயக கூட்டணி மாற்றத்தினை கொண்டு வரும் என மக்கள் நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்து கொண்டு இருக்கிறது. மதுரை மக்கள் எம்ஜிஆர் உடன் இருந்தார்கள். அதனால் மதுரையை திமுகவிற்கு பிடிக்கவில்லை. திமுக ஊழல் செய்து குடும்ப ஆட்சியை நடத்தி மக்களின் நம்பிக்கையை பாழாக்கினர்.
தெய்வீக அனுபவமாக இருந்தது
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன செய்து இருந்தாலும் உண்மை வெளிவரும். திமுகவின் நியாயமாற்ற தன்மை காரணமாகே இது நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உண்மை கண்டிப்பாக வெளிவரும். நான் இன்று மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்தேன்..
முதல் படை வீட்டு சொந்தக்காரன் முருகனை தரிசிப்பது ஒரு தெய்வீக அனுபவமாக இருந்தது. நான் தமிழ்நாடு மற்றும் ஒட்டு மொத்த தேசத்தின் நல்வளர்த்துக்காக வேண்டினேன். அதேவேளையில் என் இதயம் கனத்தது.
என் அப்பனின் பக்தர்கள் வெல்வார்கள்
பூரணச்சந்திரன் என்ற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்தார் என்பதை நான் நினைத்து பார்த்தேன். இன்று நான் அவருடைய மனைவி இந்துமதியையும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளையும் சந்தித்தேன். அவர்களின் தீவிரமான துக்கத்தை என்னால் உணர முடிந்தது.
ஒரு விஷயம், திமுக அரசாங்கத்தின் நியாயமற்ற தன்மை காரணமாகவே இது நடந்துள்ளது என்பது வலியை ஏற்படுத்துகிறது.. திமுக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். என் அப்பனின் முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்.
திமுக செய்தது என்ன?
ஊழல் செய்த மதுரை மேயரை நீக்க நேரிட்டது.. திமுக எழைகளுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. ஏழை எளிய மக்களுக்கு திமுக எதையும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாது. காங்கிரஸ் கட்சியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த போது திமுக செய்தது என்ன?
சிலர் மீண்டும் பதவிக்கு வர கனவு காண்கிறார்கள். இந்ததேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை பார்க்கும் போது அது கனவாக போகும். திமுக வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதை உங்கள் கண்களில் பார்க்கிறேன். என்று கூறினார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications