மனிதன் மிருகமாகிய தருணம்.. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியவரை கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்
மதுரை: மதுரையில் போக்குவரத்து இடையூறு தட்டிக்கேட்டவரை மிகக் கொடூரமாக கூரிய கல்லால் தலையின் பின்னால் அடித்துக் கொன்ற கொடூரனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முனிச்சாலை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படும். அதனால் திருநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தானாக முன்வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது அதன் வழியாக வந்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. கணேசன் அதைத் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து குடிகார சுப்பிரமணி, கணேசனுடன் தகராறு செய்துள்ளார்.
அத்தோடு நில்லாமல் கூரிய கல்லை எடுத்து வந்து கணேசனின் பின்னந்தலையில் பலமாக அடித்தார். இதில் கணேசன் அப்படியே மயங்கி விழுந்தார். அப்போதும் விடாத அந்த கொடூரன் கீழே விழுந்த கணேசனை மறுபடியும் கல்லால் அடித்தார்.
படுகாயமடைந்த கணேசன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து லோடு ஆட்டோ ஓட்டுனர் சுப்பிரமணியன் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
போக்குவரத்தை சரி செய்ய வந்த இடத்தில் சமூக ஆர்வலர் ஒருவரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மாதிரி மிருகங்களை என்ன செய்வது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications