அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு தண்ணீர் காட்டிய காளை! ஓனர் விருமாண்டிக்கு சூப்பர் பரிசு!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய காளைகளில் வீரர்களிடம் பிடிபடாமல் கெத்து காட்டிய காளைக்கு டிராக்டர் பரிசாக கிடைத்தது. இதை பெற்றுக் கொண்ட அதன் உரிமையாளர் விருமாண்டி தனது காளையின் வெற்றியை நெகிழ்ச்சியாக தெரிவித்தார். மேலும் தனது காலை அலங்காநல்லூரிலும் சீறிபாயும் என தெரிவித்தார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று ஏராளமான காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்தன. இதில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் கெத்து காட்டி சிறந்த காளை என்ற பெருமையை பெற்றது விருமாண்டியின் காளை.
இந்த காளை, மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட டிராக்டரை தனது உரிமையாளருக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த வெற்றி குறித்து விருமாண்டி கூறுகையில், இந்த ஆண்டு நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எனது காளை முதல் பரிசு வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. முதல்வர் சார்பில் வழங்கப்பட்ட டிராக்டரை எனது காளை எனக்கு பெற்றுத் தந்தது.
அவனியாபுரத்தில் டோக்கன் வாங்குவதற்கே நான் மிகவும் சிரமப்பட்டேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் காளை உரிமையாளர்கள் எளிதாக டோக்கன் பெற்றுக் கொள்ள தமிழக அரசு வழி செய்ய வேண்டும். இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாடுபிடி வீரராக முதல் பரிசு பெற்றிருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
எனினும் எனது காளைக்கு அங்கீகாரம் கிடைத்தது திருப்தி அளிக்கிறது. அவனியாபுரத்தைத் தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் எனது காளையை இறக்க போகிறேன். அங்கும் என் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி வாகை சூடும் என தெரிவித்திருந்தார்.
அது போல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 937 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. இதில் 22 காளைகளை அடக்கி வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை பெற்றார்.
மேலும் 17 காளைகளின் திமிலை அடக்கி கார்த்திக் இரண்டாம் இடத்தையும் 16 காளைகளை அடக்கி ரஞ்சித் குமார் 3ஆவது பரிசையும் பெற்றார். கார்த்திக்கிற்கு பைக்கும், ரஞ்சித்குமாருக்கு தங்கக் காசுகளும் பரிசாக கொடுக்கப்பட்டன. இன்று நடந்த போட்டியில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 57 பேர் காயமடைந்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications