"பிக் மெசேஜ்".. எடப்பாடி, ஓபிஎஸ்ஸை ஒன்றாக வரச்சொன்ன மோடி.. உத்தரவிற்கு பின் உள்ள "அந்த" காரணம்!
மதுரை: மிகப்பெரிய திருப்பமாக மதுரை வந்த பிரதமர் மோடியை இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இதன் மூலம் அதிமுகவிற்கு பிரதமர் மோடி முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி பெங்களூரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.
இதற்காக பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார்.

வரவேற்பு
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக வரவேற்றனர். திட்டப்படி எடப்பாடி பழனிசாமி மோடியை வரவேற்பதாக இருந்தது. மோடியை வழியனுப்ப ஓ பன்னீர்செல்வம் வருவதாக இருந்தது. ஆனால் மாற்றி மாற்றி நேரம் கொடுக்க முடியாது என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இரண்டு பேரும் ஒன்றாக வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படியே இரண்டு பேருமே தலா 10 பேருடன் மோடியை சந்திக்க இன்று மதுரை விமான நிலையத்திற்கு சென்றனர். மதுரை விமான நிலையத்தில் இரண்டு பேருமே தங்களுடன் வந்த 20 பேருடன் நின்றனர். மோடி வந்ததும் இவர்கள் உள்ளே செல்ல வேண்டும். அப்போது அதிகாரி ஒருவர் இவர்களை தடுத்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்
தலா 10 பேரை எல்லாம் அழைத்து செல்ல முடியாது. தலா 5 பேரை மட்டும் அழைத்து செல்லுங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தன்னுடன் 5 பேரை அழைத்து சென்றார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் 5 பேரை அழைத்து சென்றார். உள்ளே சென்ற பின் விமான நிலையத்தில் இவர்கள் வரிசையாக நின்றுள்ளனர். இதனால் அங்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

என்ன நடந்தது?
இவர்களை பார்த்ததும் மோடி அருகில் வரும்படி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இருவரையும் அருகில் வரும்படி கூறினார். இருவரிடமும் ஒரே நேரத்தில் மோடி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் ஒன்றாக சென்று அடுத்தடுத்து பிரதமர் மோடியிடம் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்துள்ளனர். அதன்பின் அவர்களுடன் வந்த அதிமுக நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு வணக்கம் வைத்துள்ளனர்.

மெசேஜ்
இந்த சம்பவம் மூலம் அதிமுகவிற்கு மிக முக்கியமான மெசேஜ் ஒன்றை மோடி கொடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதன்படி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேரையும் நாங்கள் வேறு வேறாக பார்க்கவில்லை. இரண்டு பேரையும் ஒன்றாக பார்க்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இரண்டு பேருமே எங்களுக்கு முக்கியம் என்பதை பாஜக அதிமுகவிற்கு சொல்லாமல் சொல்லி உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications