மதுரையில் பாஜகவினரை ஓட ஓட விரட்டியடித்த விசிக நிர்வாகிகள்- வைரல் வீடியோ
மதுரை: மனுதர்மம் விவகாரத்தில் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய போராட்ட இடத்துக்கு வந்த பாஜகவினரை அந்த கட்சி நிர்வாகிகள் ஓட ஓட விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மனுதர்மம் பெண்களை இழிவுபடுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். ஆனால் இந்து பெண்கள் அத்தனை பேரையுமே திருமாவளவன் இழிவாக விபச்சாரிகள் என பேசிவிட்டார் என பாஜக கூறுகிறது.

சென்னை போராட்டம்
திருமாவளவனை கைது செய்யக் கோரி பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். சென்னையில் நடிகை கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றனர்.

குஷ்பு கைதாகி விடுதலை
சிதம்பரத்தில் போராட்டம் நடத்த சென்ற பாஜக நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டார். அப்போது குஷ்பு தங்கவைக்கப்பட்ட விடுதியை விடுதலை சிறுத்தைகள் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

மதுரை விசிக போராட்டம்
மதுரையில் பாஜகவுக்கு எதிராக இன்று விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாஜகவினர் வந்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அந்த பாஜகவினரை சூழ்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கமிட்டனர்.
பாஜகவினர் விரட்டியடிப்பு
ஒருகட்டத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓட விடுதலை சிறுத்தைகளும் துரத்தினர். இரு கட்சியினர் பின்னால் போலீசாரும் ஓட நேர்ந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications