மதுரையில் ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. ஏன் தெரியுமா?
மதுரை: மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஓட்டல் உரிமையாளரிடம் போனில் மன்னிப்பு கேட்டுள்ளார். என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.
இன்று(ஜூலை 28) 'என் மண் என் மக்கள்' என்ற கோஷத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். இந்த பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார் இதற்காக வியாழக்கிழமை (நேற்று) மதியம் அண்ணாமலை மதுரைக்கு வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்குவழிச்சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி ஓட்டலில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது.
ஆனால் இதுகுறித்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ஓட்டல் முன்பு கட்சி கொடிகளுடன் காத்திருந்தவர்களை பார்த்துள்ளார். தன் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கருதி அவர்களுக்கு 'சைகை' காட்டிவிட்டு திருப்புவனத்தை தாண்டிச் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள், மதிய உணவு குறித்து அவருக்கு தெரிவித்தனர். உடனடியாக ஓட்டல் உரிமையாளர் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அண்ணாமலை, 'ஸாரி அண்ணா. ஓட்டல் முன்பு கூட்டம் இருந்ததால் கடந்து சென்றுவிட்டேன். உடனடியாக 'U' டர்ன் செய்து ஓட்டலுக்கு வரமுடியவில்லை. அடுத்தமுறை கட்டாயம் வருகிறேன்' என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ராமேஸ்வரத்தில் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (இன்று) தொடங்கி வைக்கிறார். இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் யாத்திரை போகிறோம். நாளை முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரை நடைபெறும். இந்த முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெற போகிறது. 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும். ஜன.11-க்குள் முன்பு யாத்திரை முடிக்கப்படும் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications