பிடிஆர் கார் மீது விழுந்த “சின்ட்ரெல்லா” செருப்பு.. வேட்டையை தொடங்கிய போலீஸ்! ஓடி ஒளிந்த பாஜக தலைகள்
மதுரை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் தாங்களும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமறைவாகி இருக்கின்றனர்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும்போது வீரமரணமடைந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் அவரது கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் வழக்கு
அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின்பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

10 பேர் கைது
முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவரை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் சரவணனையும் கைது செய்யக்கோரி மதுரை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது.

போலீஸ் வலைவீச்சு
இதுவரை 10 பேர் கைதான நிலையில், புகைப்படங்கள், வீடியோக்களில் இடம்பெற்ற பாஜகவினரை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே விமான நிலையத்துக்கே செல்லாத தங்கள் கட்சியினரை எல்லாம் காவல்துறை கைது செய்வதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தலைமறைவு
இதன் காரணமாக அக்கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பலர் தாங்களும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எண்ணி தலைமறைவாகிவிட்டார்கள். இதுகுறித்து 2 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாஜக நிர்வாகி ராஜரத்தினம் தெரிவிக்கையில், பாஜகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications