மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலில் பாஜக எடுக்கும் அதிரடி அஸ்திரம்.. மதுரை வரும் நட்டா.. முக்கிய சென்டிமெண்ட் இருக்கு!

Google Oneindia Tamil News

மதுரை: சசிகலா அரசியல் நிலைப்பாடு என்பது சசிகலா வந்த பின்னர் அவர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும் மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்தார். இதனிடையே தமிழ் மொழி மற்றும், கலாச்சாரம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி தேர்தலை சந்திக்க முடிவு பாஜக முடிவு செய்திருப்பது அந்த கட்சியின் தேசிய செயலாளர் சிடி ரவி பேசியதில் தெரியவந்துள்ளது.

Recommended Video

    தேர்தலில் பாஜக எடுக்கும் அதிரடி அஸ்திரம்.. மதுரை வரும் நட்டா.. முக்கிய சென்டிமெண்ட் இருக்கு! - வீடியோ

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 3 அல்லது நான்கு மாதங்களில் நடைபெற போகிறது. அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரமாக பிரச்சாரத்தை துவக்கிவிட்டன.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அதிமுக, திமுக அணிகளே இப்போது தேர்தலை சந்திக்கின்றன. இப்போது வரை அப்படித்தான் உள்ளது. எனினும் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் நிலைப்பாட்டை மாற்றுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேமுதிகவும், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் பாமகவும் உறுதியாகவும் உள்ளன.

    தீவிரமாக இறங்கி உள்ளது

    தீவிரமாக இறங்கி உள்ளது

    இவை இரண்டுக்குமே ஆளும் அதிமுக எந்த பதிலோ உத்தரவாதமோ இதுவரை அளிக்கவில்லை. இதனிடையே பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு வலிமையாக தேர்தலை சந்திக்க உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியாகவும், மாநிலத்தில் ஆளும் அதிமுகவின் கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்க உள்ள பாஜக அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

    சிடி ரவி ஆய்வு

    சிடி ரவி ஆய்வு

    மதுரையில் இன்று முதல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பொதுக்கூட்ட நிகழ்விற்கான முன்னேற்பாட்டு பணிகளை மாநில தலைவர் முருகன் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர் .

    வலிமையான கூட்டணி

    வலிமையான கூட்டணி

    அப்போது எல் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான மதுரையில் நாளை துவங்க உள்ள பிரச்சாரம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும்.தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது.

    சசிலா நிலைப்பாடு

    சசிலா நிலைப்பாடு

    நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாகவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வருகிறார். சசிகலா அரசியல் நிலைப்பாடு என்பது சசிகலா வந்த பின்னர் அவர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும்.

    செண்டிமெண்ட்

    செண்டிமெண்ட்

    தொடர்ந்து பேட்டியளித்த பாரதிய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி, வரலாற்றில் முக்கிய இடமான மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை ஜே.பி.நட்டா துவங்குகிறார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா இதே இடத்தில் பிரச்சாரம் செய்தார். பாஜக தமிழ் மொழி மற்றும், கலாச்சாரத்தை காக்கும் என்று பேசினார். மதுரையில் பிரச்சாரத்தை ஜெயலலிதா துவங்கி ஜெயித்ததால் அதே பாணியில் ஜேபி நட்டாவும் பிரச்சாரம் செய்ய வருவது தெரிகிறது. அத்துடன் தமிழ் மொழி மற்றும், தமிழ் கலாச்சாரம் போன்ற விஷயங்களில் கவனத்தை பாஜக செலுத்தி வருவதும் தெரிகிறது.

    English summary
    bjp leader murugan said Sasikala's political position will depend on the decision she makes after arrives. cd ravi said e BJP will protect the Tamil language and culture.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X