அரசியல் கோமாளி! தெர்மாகோல் விஞ்ஞானி.. செல்லூர் ராஜூவை கலாய்த்து போஸ்டர்! மீண்டும் மோதும் அதிமுக-பாஜக
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். அப்போது முதலே, அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலையை அவ்வப்போது விமர்சித்து வந்தனர்.

ஆனாலும் அதிமுக - பாஜக கூட்டணி நீடிப்பதாக கட்சியின் தலைமை கூறி வந்தது. எனினும் அண்ணாமலை அவ்வப்போது கூறும் கருத்துக்கள் அதிமுகவை சீண்டும் விதமாகவே இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்த அத்தனை கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியது அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அண்ணாமலையின் இந்த கருத்து தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வாறாக அதிமுகவிற்கும் - பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வந்த நிலையில் அண்மையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறிய கருத்து அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது.
ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதை மறைமுகமாக குறிப்பிட்டு அண்ணாமலை அந்த பேட்டியில் கூறியதற்கு அதிமுக மிகவும் ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சிவி சண்முகம் உள்ளிட்டோர் காட்டமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், "பாஜகவில் மாநில தலைவர் பதவி என்பது ஒரு பொம்மையை போன்றது.
பொம்மையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ராஜாவாகவும் வைக்கலாம். கோமாளியாகவும் வைக்க முடியும். ஜெயலலிதாவை பழித்தவர்களை சும்மா விடமாட்டோம்" என காட்டமாக கூறியிருந்தார். அதிமுகவின் விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன். ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பாக எதுவும் கூறவில்லை" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மதுரையில் செல்லூர் ராஜூவை விமர்சித்து பாஜகவினர் ஒட்டியுள்ள நோட்டீஸ் மீண்டும் அதிமுக - பாஜக இடையே வார்த்தை போருக்கு வித்திட்டுள்ளது.
எங்களின் மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதியில்லாத "அரசியல் கோமாளியே ! தெர்மாகோல் விஞ்ஞானியே! உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.. என்ற வாசகங்களுடன் செல்லூர் ராஜூவை விமர்சித்து நோட்டீஸ்கள் மதுரை மாநகரில் பாஜக நிர்வாகிகள் தரப்பில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications