தீவிரம் எடுக்கும்.. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வழக்கு.. பாஜக கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்!
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலையிலுள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அக்கோயிலின் செயல் அலுவலர் வி. சந்திரசேகர், செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பி உள்ளது. முக்கியமாக பாஜக இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேரடியாக தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது இது தொடர்பாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளியிட்ட உத்தரவில், தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், அங்கு தீபம் ஏற்றுவது தர்காவையோ முஸ்லிம் சமூகத்தையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறி, அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகளை நீதிபதி நிராகரித்தார்.

அறநிலையத்துறை தவறிவிட்டது
கோயில் நிர்வாகம், மலையில் உள்ள காலிப்பகுதிகளின் மீது தனது உரிமையைப் பாதுகாப்பதில் தவறிவிட்டது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 1923 ஆம் ஆண்டின் தீர்ப்பு யார், எதற்கு உரிமையாளர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அது மசூதி நிர்வாகிகளை கோவில் பகுதியை ஆக்கிரமிப்பதில் இருந்து தடுக்கவில்லை. எனவே, அதன் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க கோயில் நிர்வாகம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம், அங்கே தீபம் ஏற்றுவதில் தவறு இல்லை" என்று நீதிபதி கூறினார்.
இதற்கிடையே, கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. மலையெங்கும் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அறநிலையத்துறை, தீபம் ஏற்றுவதற்கான சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானதாக திருப்பரங்குன்றம் கோயில், கார்த்திகை தீபத்தை ஒரு முக்கிய திருவிழாவாகக் கொண்டாடுகிறது.
செயல் அலுவலர் மேல்முறையீடு
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலையிலுள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அக்கோயிலின் செயல் அலுவலர் வி. சந்திரசேகர், செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பி உள்ளது. முக்கியமாக பாஜக இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.
பாஜக கையில் எடுத்த அஸ்திரம்
இந்நிலையில், கார்த்திகை தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் மகா கார்த்திகை தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும் தமிழக அரசும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் அதற்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்புக்கு எதிராக தடை கோரி இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அத்தீர்ப்பை அமல்படுத்த தடை கோரி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
முதன் முதலில் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய Religious Endowment Act என்கிற பெயரில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அன்று இருந்த கிறிஸ்தவ ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்கள் அச்சட்டத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு விலக்கு அளித்தனர். அதன் பிறகு அச்சட்டம் Hindu Muslim Endowment Act என மாற்றப்பட்டது. அச்சட்டத்திலிருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் போராடியதைத் தொடர்ந்து அச்சட்டத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு Hindu Religious Endowement Act என சட்டம் பெயர் மாற்றப்பட்டு அதற்கென
Hindu Religious and Charitable Endowments என ஒரு துறை உருவாக்கப்பட்டு இன்று வரையிலும் இந்து மதத்தின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்காகவும், வழிபாட்டு முறைகளை சிதைப்பதற்காகவும் மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணின் மதமான பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே Hindu Religious and Charitable Endowments செயல்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆலயங்களின் பொருளாதார விஷயங்களில் ஆலோசனைகள் வழங்கலாமே தவிர இந்து சமய சடங்குகளுக்கு தடை விதிக்கவோ அல்லது இந்து சமய வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு தடை கோரவோ அதற்கு உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் பணி என்பது அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆலயங்களை பராமரித்து, பாதுகாத்து, பூஜை புனஸ்காரங்கள் தடையின்றி நடைபெறுவதற்கும் இந்து சமய சடங்கு சம்பிரதாயங்களை தொடர்ந்து ஆலயங்களில் கடை பிடிப்பதற்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காகவும் பணி செய்ய வேண்டுமே தவிர இந்துக்களுக்கு எதிராகவோ, ஆலயங்களை அழிப்பதற்கோ துணை போவது இந்து சமய அறநிலையத்துறையின் பணி அல்ல. நாளைய தினம் கார்த்திகை தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என்று கூறி உள்ளார்.
வானதி சீனிவாசன்
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்துள்ள போஸ்டில், இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் திமுக அரசு ... தமிழ் கடவுளாம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை பெயரில் கோடிகளில் கோவில் வருமானங்களை ஏற்றுக்கொள்ளும் இந்த திராவிட மாடல் அரசு இந்துக்களின் மத உணர்வினையும், வழிபாட்டு உரிமைகளையும் புண்படுத்தும் விதமாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து இந்து மத வழிபாடுகளுக்கு எதிராக விரோத மனப்பான்மையை ஏற்படுத்தி இறையாண்மையை அழித்து வருவது தான் சாபக்கேடாக விடியா திமுக அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. , என்று கூறி உள்ளார்.
-
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications