திமுகவுக்கு இப்போ புரிஞ்சிருக்கும்.. பிடிஆரே ஒத்துக்கிட்டாரே.. தெறிக்க விட்ட வானதி சீனிவாசன்
திமுகவை விமர்சித்து வானதி சீனிவாசன் பேட்டி தந்துள்ளார்
மதுரை: பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று சொன்னாலும் கூட, அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது... திமுக இதை இப்போது புரிந்து கொண்டிருக்கும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்திருந்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்..
அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு வானதி தந்த பதில்களும் இவைதான்:

மோடி வருகை
வருகிற 12-ம் தேதி மோடியின் தமிழக வருகையை போது புதிய திட்டங்கள் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 12ம் தேதி பிரதமர் அரசு விழாவிற்கு வருகை தரும்பொழுது, பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக மட்டுமே இப்போது முடிவாகியுள்ளது... புதிய திட்டங்கள் அறிவிப்பதை சொல்லிவிட்டு தான் அறிவிப்பார்கள்.. அதனால், இப்போதைக்கு மருத்துவக்கல்லூரி திறந்து வைப்பதற்காக தான் பிரதமர் வருகிறார் என்றார்.

தமிழகம்
தற்போது பிரதமர் அரசு விழாவாக வருவதால் கோபேக்மோடி காட்ட முடியாது என்று திமுக சொல்லியுள்ளதே என்ற கேள்விக்கு, தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகின்றபோது, அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்கத்தான் வேண்டும்... கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை பிரதமர் திறந்து வைக்க வரும்போது கோபேக்மோடி என்று சொன்னார்கள்.. அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்..

புரிதல்
பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று சொன்னாலும் கூட அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது... இவையெல்லாம் அவர்கள் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார் வானதி சீனிவாசன்... இதையடுத்து, தமிழகத்தை மத்திய அரசு மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கிறது என்று எம்பி மாணிக்கம் தாகூர் சொல்லியிருக்கிறாரே என்று அடுத்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்..

மாற்றான்தாய்
அதற்கு வானதி, "எந்தெந்த விதத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாக பார்க்கிறது என்று அவர்களை புள்ளிவிபரம் கொடுக்க சொல்லுங்கள்... அது டிபன்ஸ் காரிடார் ஆக இருக்கட்டும், சாலை வசதிகள் ஆக இருக்கட்டும், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்திற்காக மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இரண்டு மூன்று திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலையே உள்ளது.. இது மாற்றாந்தாயின் மனப்பான்மையா? மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத இடத்தில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது" என்றார்.












Click it and Unblock the Notifications