அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவே பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல்- கனிமொழி கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அதிபர் தேர்தல் முறையை இந்தியாவில் கொண்டு வந்து ஜனநாயகத்தை முற்றிலும் அழித்துவிட்டு, மாநில ஆட்சிகளை கைப்பற்றி தான் நினைத்ததை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாஜக துடிக்கிறது என திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: நாட்டில் இன்று இருக்கக்கூடிய அரசியல் சூழலில் யார் யாரோ எதை எல்லாமோ கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏன் உலகளவில் பெயர் பெற்றிருக்கக் கூடிய ஐஐடி கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடியவர் மாட்டின் கோமியத்தில் மருத்துவ சக்திகள் இருக்கிறது என்று ஒரு படித்தவர் பேசிக் கொண்டிருக்கக் கூடிய சூழலில் தான் இன்று நாம் ஒரு அரசியலை எதிர்கொண்டிருக்கிறோம். இப்படி இவர்கள் இதையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கக் கூடிய அந்த நேரத்திலே நாம் நம் மொழிக்காக, நம் இனத்திற்காக, இந்த இனத்தின் எதிர்காலத்திற்காக, அடுத்த தலைமுறைக்காக நம்முடைய சுயமரியாதைக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கான ஒரு நிகழ்வாக மொழிப்போர் தியாகிகள் தினத்தை இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களாக நடத்தி வருகிறோம்.

bjp dmk one nation one election kanimozhi

விஸ்வகர்மா திட்டம்

இன்று தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்திருக்கிறது, அதில் நம்முடைய முதலமைச்சரும், திமுகவும் தெளிவாக இருக்கிறது. ஏனென்றால், நம்முடைய கல்விக் கொள்கையில் ஒரு மாணவன் இருந்தாலும் அவனுக்காக அந்த பள்ளிக்கூடத்தை செயல்படுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முதலில் இந்தியை திணிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்தபடியாக அதிக மாணவர்கள் இருந்தால் மட்டுமே பள்ளியை இயக்க வேண்டும் என சில பேருக்கு கல்வி, சில பேருக்கு கல்வி இல்லை என்பதை கொண்டு வர முயற்சிக்கிறது. அதுதான் விஸ்வகர்மா திட்டம்.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக திமுக அரசு

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் பட்டங்களை அங்கீகரிக்க மாட்டோம் என ஒன்றிய அரசு கூறுகிறது. அவர்கள் யார் நம்மை அங்கீகரிப்பதற்கு, இன்னும் 50 சதவீத உயர்கல்வியை தொடுவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும் எனக் கூறி வருகின்றீர்கள், நாங்கள் அதை கடந்து விட்டோம். அதை, கடந்து வந்த மாநிலம் தமிழ்நாடு.

கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி இருக்க வேண்டும் என அனைத்து பகுதிகளிலும் அரசு கல்லூரிகளை உருவாக்கி கொடுத்துள்ளார். ஆனால் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து அதை ஏற்றால்தான் பட்டத்தை அங்கீகரிப்போம் என கூறுகிறார்கள். அதே போன்று, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதியையும் வழங்க மறுக்கின்றனர். ஆனால், அவர்கள் நிறுத்தி வைத்த பிறகும் நம்முடைய முதல்வர் என்ன செய்தாலும் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் உங்களால் முடிந்ததை பாருங்கள் என பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

அதிபர் தேர்தல் முறைக்காக ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்துள்ளனர், எதற்காக என்றால் அதிபர் தேர்தல் முறையை இங்கு கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் ஜனநாயகத்தை முற்றிலும் அழித்துவிட்டு, மாநில ஆட்சிகளை கைப்பற்றி தான் நினைத்ததை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது.

உலக வரலாறும் தமிழ்நாடும்

இந்த இனத்தின் பெருமையை பேச வேண்டும் என்றால் சில நாட்களுக்கு முன்னால் 2 ஆயிரம் 3 ஆயிரம் ஆண்டுகள் என்று பேசிக் கொண்டிருந்தோம் சமீபத்தில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்க கூடிய ஒரு புத்தகத்தின் தரவுகளில் அவர் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார். ஏன் முன்பு அவர் பேசும் போது கூட இனிமேல் தமிழ்நாட்டை விட்டுவிட்டு இந்திய வரலாறை எழுத முடியாது என்பார். ஆனால், இப்பொழுது அவர் தந்திருக்கக் கூடிய அந்த தரவுகளுக்கு பிறகு உலக வரலாற்றை தமிழ்நாட்டை விட்டுவிட்டு யாராலும் எழுத முடியாது என்பதை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+