மதுரையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை.. காஜிமார் தெருவில் பரபரப்பு!
மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மதுரை: மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்தியா இலங்கை எல்லையிலும் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் மதுரை காஜிமார் தெருவில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்குள்ள பள்ளிவாசல் அருகே இருக்கும் மர்ம பையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த பள்ளிவாசல் அருகே இந்த பை நீண்ட நேரமாக இருந்துள்ளது. இந்த பெரிய புதிய பையை பார்த்து மக்கள் போலீசிடம் புகார் கொடுத்துள்ளனர். மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடக்கிறது. இதில் என்ன இருக்கிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications