250 நாற்காலி மேடைக்கு வரணும்! ஃபாஸ்ட் ஃபாஸ்ட் ப்ளீஸ்! அதிமுக தொண்டர்களிடம் கெஞ்சிய சி.விஜயபாஸ்கர்!
மதுரை: அதிமுக மாநாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விழா மேடையில் எடப்பாடி பழனிசாமியுடன் 250 நிர்வாகிகளை அமர வைக்கும் வகையில் நாற்காலிகள் போட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
அதிமுக மாநாட்டு பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்ததில் சி.விஜயபாஸ்கரும் ஒருவர். கால்கோள் விழாவில் ஆரம்பித்து இன்றைய தினம் ஒருங்கிணைப்பு வரை அனைத்து வேலைகளையும் கவனித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமி விழா மேடைக்கு வருகை தரவுள்ளார். (நீங்கள் இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போது மாநாடு மேடைக்கு அவர் வந்திருக்கக் கூடும்). இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைப்பு நிர்வாகிகள் என 250 பேரை எடப்பாடி பழனிசாமியுடன் மேடையேற்றியிருக்கிறார் சி.விஜயபாஸ்கர்.
பிற்பகல் 3.30 மணி முதலே இதற்கான நாற்காலி அரேஞ்ச்மெண்ட் பணிகளை விஜயபாஸ்கர் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். விஐபி பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொண்டர்கள் அமர்ந்துகொண்டதால், அவர்களிடம் இருந்து கெஞ்சி அந்த நாற்காலிகளை வாங்கி மேடையில் போட்டார்.
பாசறை நண்பர்கள் தொண்டர்களிடம் இருந்து நாற்காலியை வாங்கிக்கொண்டு மேடைக்கு வாங்க ஃபாஸ்ட் ஃபாஸ்ட் ப்ளீஸ் என பரபரத்தார். இதனிடையே கூட்டம் லேசாக கலையத் தொடங்கியதை மேடையில் இருந்து பார்த்த விஜயபாஸ்கர், இன்னும் இரண்டு மணி நேரம் மட்டும் தான், தயவு செய்து எல்லோரும் பொறுமைக் காக்குமாறு கேட்டுக்கொண்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications