மற்ற மதத்தை கொச்சைப்படுத்த முடியுமா? முருகன் மாநாட்டில் பவன் கல்யாண் கேள்வி
மதுரை: ‛‛நம்மை இணைக்கும் முருகனை ஒரு கூட்டம் சீண்டிப்பார்க்கிறது. கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்யும் உரிமை சிலருக்கு உள்ளது. என் பண்பாட்டை, கலாசாரத்தை கேலி செய்கின்றனர். கேட்டால் இதுதான் மதசார்பின்மை என்கின்றனர். மற்றவர்களின் மதத்தை கொச்சைப்படுத்த அவர்கள் யார். முருகனை கொச்சைப்படுத்த அவர்கள் யார். அரேபியாவில் இருந்து வந்த மதத்தை இப்படி பேச முடியுமா?'' என்று மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடந்து வருகிறது. இதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகின் முதல் புரட்சி தலைவராக திகழ்கிறார் முருகன். என்னை வளர்த்தது முருகன்; எனக்கு துணிச்சல் தந்தது முருகன். சீண்டி பார்க்காதீர்கள்; சாது மிரண்டால் காடு கொள்ளாது. நமது கிருஷ்ண பகவான் கருப்பு. காளி மாதா கருப்பு. நாம் நிறத்தின் வழியாக பார்ப்பது இல்லை. அகத்தின் வழியாக பார்க்கிறோம்.
ஆனால் கருப்பு நிறத்தை வைத்து கடவுளை அசிங்கப்படுத்தும் கூட்டம் உள்ளது. நம்மை இணைக்கும் முருகனை ஒரு கூட்டம் சீண்டிப்பார்க்கிறது. கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்யும் உரிமை சிலருக்கு உள்ளது. என் பண்பாட்டை, கலாசாரத்தை கேலி செய்கின்றனர். கேட்டால் இதுதான் மதசார்பின்மை என்கின்றனர்.
ஒரு அரசியல் கட்சி தலைவர் முருகன் மாநாட்டை உபியில் நடத்த வேண்டியது தானே என்று கேள்வி கேட்கிறார். மற்றவர்களின் மதத்தை கொச்சைப்படுத்த அவர்கள் யார். முருகனை கொச்சைப்படுத்த அவர்கள் யார். அரேபியாவில் இருந்து வந்த மதத்தை இப்படி பேச முடியுமா?
என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்ய வேண்டாம். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம்; இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம்; இந்துக்கள் மட்டும் இந்துவாக இருந்தால் சிலருக்கு பிரச்சனை. இங்குள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போய்விடும். சிவப்பெருமான் நெற்றிக்கண் திறந்த பூமி.
முருகனை அவமதிக்க இன்று இந்த கூட்டம். நாளை இன்னொரு கூட்டம் வரும். முருகனை பற்றி இகழ்ந்து சொன்னால் நீங்கள் வெடிக்க வேண்டாமா. நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்ற வேண்டாம். ஆனால் நம்மை காப்பாற்றும் முருகனுக்கு கைமாறு செய்ய வேண்டாமா.. காட்டாற்று வெள்ளம் போல் பொங்குவோம். இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?'' என்று பேசினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications