முறைகேடு.. தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் அரசு ஆசிரியர் கைது.. சிபிஐ அதிரடி! என்னாச்சு?
2022 ம் ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் எப்போதும் பள்ளி மாணவர்கள் யூனிபார்ம்மை தான் ஆடையாக அணிந்து செல்வார்.
மதுரை: 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இடைநிலை வகுப்பு ஆசிரியரான ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வருமான வரி தொடர்பான முறைகேடு புகாரில் சிக்கிய அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை பாராட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மொத்தம் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வாகி இருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் கே ராமச்சந்திரன் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானார்.

தேசிய நல்லாசிரியர் விருது
கொரோனா கால உதவி, போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி, students skills என்ற பெயரில் பள்ளிக்கு தனி யூடியூப் சேனல் தொடங்கி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர செய்தார். மேலும் பள்ளி மாணவர்களை போல் யூனிபார்ம் அணிந்து பள்ளிகளுக்கு செல்லும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டார். இந்த சேவையை பாராட்டி தான் அவருக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து அவர் விருது பெற்றார். அப்போது கூட அவர் பள்ளியின் சீருடையிலேயே சென்று விருது பெற்று வியக்க வைத்தார்.

சிபிஐ அதிகாரிகள் கைது
இந்நிலையில் தான் தற்போது ஆசிரியர் கே ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவரது சகோதரர் பஞ்சாட்சரத்தால் சிபிஐ அதிகாரிகளிடம் கே ராமச்சந்திரன் சிக்கி உள்ளார். பணமுறைகேடு தொடர்பான புகாரில் நேற்று ஆசிரியர் கே ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது தெரியவந்தது. மதுரையில் விசாரணைக்கு ஆஜரான அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை ஏன்?
அதாவது ஆசிரியர் ராமச்சந்திரனின் சகோதரர் பெயர் பஞ்சாட்சரம். இவர் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் வருமான வரி தாக்கல் தொடர்பான விபரங்கள் மற்றும் வரி தாக்கல் செய்யும் பணி மேற்கொள்ளும் நிறுவனம் நிறுவனத்தை நடத்துகிறார். இவர் Income tax e file மூலம் நிறையபேருக்கு குறைவான கணக்கு காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 2.84 கோடி வரை முறைகேடாக வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப பெற்று கொடுத்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமான வரி வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து 2021ல் பஞ்சாட்சரத்துக்கு எதிராக புகார் சென்றது. சிபிஐ அதிகாரிகள் விசாரித்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வந்த நிலையில் அவரது பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.12 லட்சம் பணப்பரிமாற்றம்
இந்நிலையில் தான் பஞ்சாட்சரத்திடம் இருந்து ஆசிரியர் ராமச்சந்திரன் வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து தான் ஆசிரியர் ராமச்சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படும் நிலையில் கூட்டு சதி செய்ததாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரை மதுரையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications