மதுரையில் ரூ. 1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவீட் வெளியிட்டுள்ளனர்.
ரூ. 1264 கோடி மதிப்பில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ளது.
|
கொண்டாட வேண்டிய நாள்
இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் போட்டுள்ள டிவீட்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ள சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு நன்றி. இது கொண்டாடுவதற்கான தினம் என்று கூறியுள்ளார்.
|
நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டுள்ள டிவீட். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமைக்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இழுபறிக்குப் பின்னர்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 4 ஆண்டு கால இழுபறிக்குப் பிறகு இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை நனவாகவுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
|
தென் தமிழகத்தில்
சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தென் தமிழகத்தில் அமையவுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் இதற்காக 200 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் கண்டறியப்பட்டு விட்டது. மதுரையில் உலகத் தரம் வாய்ந்த அரசு மருத்துவமனை இருப்பதை கணக்கில் கொண்டும், தென் தமிழகத்தின் முக்கிய முக்கிய நகரம் என்பதாலும் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடும் போட்டிக்கு மத்தியில்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத் தேர்வுக்கே பல காலம் பிடித்தது. முதலில் காஞ்சிபுரம் என்றார்கள். பின்னர் தஞ்சை என்றார்கள். சேலம் என்றும் பேச்சு அடிபட்டது. கடைசியில் மதுரை தோப்பூர் முடிவானது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications