மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2026-க்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி கட்டி முடிப்பீர்கள்?.. உயர்நீதிமன்றம் மதுரை கிளை

Google Oneindia Tamil News

மதுரை: 2026 ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி கட்டி முடிப்பீர்கள் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே. கே. ரமேஷ் என்பவர் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக நடத்தி கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

மோர்பி பால விபத்து.. உயர்நீதிமன்றம் எழுப்பிய 'நறுக்' கேள்வி.. இதை கவனிச்சீங்களா? ப.சிதம்பரம் சுளீர் மோர்பி பால விபத்து.. உயர்நீதிமன்றம் எழுப்பிய 'நறுக்' கேள்வி.. இதை கவனிச்சீங்களா? ப.சிதம்பரம் சுளீர்

36 மாதங்கள்

36 மாதங்கள்

அந்த வழக்கு விசாரணையில் 36 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது வரை அதற்கான எந்தக் கட்டுமான பணிகளும் தொடங்காத நிலையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியை மீறிய சுகாதாரத் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு முன் வைத்த வாதத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக ரூ 1977 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் 8 மாதங்கள்

5 ஆண்டுகள் 8 மாதங்கள்

இதை கட்டுவதற்கு 5 ஆண்டுகள் 8 மாத காலமாகும். அதாவது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் முடிக்கப்படும். எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து 2026 அக்டோபரில் எப்படி மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

மதுரை தோப்பூர்

மதுரை தோப்பூர்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் செப்டம்பர் 2022 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேட்ட போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பதில் அளிக்கையில் கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் இல்லை என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Chennai HC Madurai branch asks Centre to submit report about how could u build Aiims within 2026?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X